ஜாபிர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"நான் இங்கே அறுத்துப் பலியிட்டேன்; மினா முழுவதும் அறுத்துப் பலியிடும் இடமாகும். ஆகவே, உங்கள் தங்குமிடங்களிலேயே நீங்கள் அறுத்துப் பலியிடுங்கள். நான் இங்கே நின்றேன்; அரஃபா முழுவதும் நிற்குமிடமே ஆகும். மேலும் நான் இங்கே நின்றேன்; ஜம்வு (முஸ்தலிஃபா) முழுவதும் நிற்குமிடமே ஆகும்."
ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
(முந்தைய ஹதீஸில்) கூடுதலாகப் பின்வருமாறு இடம்பெற்றுள்ளது: "(நீங்கள்) உங்கள் தங்குமிடங்களிலேயே குர்பானி கொடுங்கள்."