இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

3669ஸஹீஹ் முஸ்லிம்
حَدَّثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ، وَقُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، وَابْنُ، حُجْرٍ قَالُوا حَدَّثَنَا إِسْمَاعِيلُ، - يَعْنُونَ ابْنَ جَعْفَرٍ - عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرٍو، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ فَاطِمَةَ بِنْتِ قَيْسٍ، ح وَحَدَّثَنَاهُ أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بِشْرٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَمْرٍو، حَدَّثَنَا أَبُو سَلَمَةَ، عَنْ فَاطِمَةَ بِنْتِ قَيْسٍ، قَالَ كَتَبْتُ ذَلِكَ مِنْ فِيهَا كِتَابًا قَالَتْ كُنْتُ عِنْدَ رَجُلٍ مِنْ بَنِي مَخْزُومٍ فَطَلَّقَنِي الْبَتَّةَ فَأَرْسَلْتُ إِلَى أَهْلِهِ أَبْتَغِي النَّفَقَةَ ‏.‏ وَاقْتَصُّوا الْحَدِيثَ بِمَعْنَى حَدِيثِ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ عَنْ أَبِي سَلَمَةَ ‏.‏ غَيْرَ أَنَّ فِي حَدِيثِ مُحَمَّدِ بْنِ عَمْرٍو ‏ ‏ لاَ تَفُوتِينَا بِنَفْسِكِ ‏ ‏ ‏.‏
அபூசலமா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
நான் இதை ஃபாத்திமா பின்த் கைஸ் (ரலி) அவர்களின் வாயிலிருந்து நேரடியாக எழுதிக்கொண்டேன். ஃபாத்திமா பின்த் கைஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்:
நான் பனூ மக்ஸூம் குலத்தைச் சேர்ந்த ஒருவருக்கு வாழ்க்கைப்பட்டிருந்தேன். அவர் என்னை (திரும்பப் பெற முடியாதவாறு) அறுதியிட்டு தலாக் கூறிவிட்டார். ஆகவே, நான் ஜீவனாம்சம் கேட்டு அவருடைய குடும்பத்தாருக்கு ஆளனுப்பினேன்.
(இதன் தொடர்ச்சியை) யஹ்யா பின் அபீ கஸீர் (ரஹ்) அவர்கள் அபூசலமா (ரஹ்) அவர்களிடமிருந்து அறிவிக்கும் ஹதீஸின் கருத்திலேயே அறிவிப்பாளர்கள் அறிவித்தார்கள். ஆனால், முஹம்மத் பின் அம்ர் (ரஹ்) அவர்களின் அறிவிப்பில் (நபி (ஸல்) அவர்கள்,) "உன்னை நீயே எங்களுக்கு இழந்துவிடச் செய்துவிடாதே" (என்று கூறியதாக) இடம்பெற்றுள்ளது.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح