இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

1986ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ شُعْبَةَ، ح‏.‏ وَحَدَّثَنِي مُحَمَّدٌ، حَدَّثَنَا غُنْدَرٌ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، عَنْ أَبِي أَيُّوبَ، عَنْ جُوَيْرِيَةَ بِنْتِ الْحَارِثِ ـ رضى الله عنها ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم دَخَلَ عَلَيْهَا يَوْمَ الْجُمُعَةِ وَهْىَ صَائِمَةٌ فَقَالَ ‏"‏ أَصُمْتِ أَمْسِ ‏"‏‏.‏ قَالَتْ لاَ‏.‏ قَالَ ‏"‏ تُرِيدِينَ أَنْ تَصُومِي غَدًا ‏"‏‏.‏ قَالَتْ لاَ‏.‏ قَالَ ‏"‏ فَأَفْطِرِي ‏"‏‏.‏
وَقَالَ حَمَّادُ بْنُ الْجَعْدِ سَمِعَ قَتَادَةَ حَدَّثَنِي أَبُو أَيُّوبَ أَنَّ جُوَيْرِيَةَ حَدَّثَتْهُ فَأَمَرَهَا فَأَفْطَرَتْ.
ஜுவைரியா பின்த் அல்-ஹாரித் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நபி (ஸல்) அவர்கள் ஒரு வெள்ளிக்கிழமை அன்று ஜுவைரியா (ரலி) அவர்களிடம் சென்றார்கள். அப்போது அவர்கள் நோன்பு நோற்றிருந்தார்கள். நபி (ஸல்) அவர்கள், "நேற்று நோன்பு நோற்றீர்களா?" என்று கேட்டார்கள். அவர்கள், "இல்லை" என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், "நாளை நோன்பு நோற்க எண்ணியுள்ளீர்களா?" என்று கேட்டார்கள். அவர்கள், "இல்லை" என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், "அப்படியானால், நோன்பை விட்டுவிடுங்கள்!" என்று கூறினார்கள்.

ஹம்மாத் பின் அல்-ஜஅத் (ரஹ்) வழி அறிவிப்பில், "நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்; அதன்படி ஜுவைரியா (ரலி) அவர்கள் நோன்பை விட்டுவிட்டார்கள்" என்று இடம்பெற்றுள்ளது.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح