இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

4440ஸஹீஹ் முஸ்லிம்
حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، وَأَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ كِلاَهُمَا عَنْ أَبِي مُعَاوِيَةَ، قَالَ يَحْيَى أَخْبَرَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُرَّةَ، عَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ، قَالَ مُرَّ عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم بِيَهُودِيٍّ مُحَمَّمًا مَجْلُودًا فَدَعَاهُمْ صلى الله عليه وسلم فَقَالَ ‏"‏ هَكَذَا تَجِدُونَ حَدَّ الزَّانِي فِي كِتَابِكُمْ ‏"‏ ‏.‏ قَالُوا نَعَمْ ‏.‏ فَدَعَا رَجُلاً مِنْ عُلَمَائِهِمْ فَقَالَ ‏"‏ أَنْشُدُكَ بِاللَّهِ الَّذِي أَنْزَلَ التَّوْرَاةَ عَلَى مُوسَى أَهَكَذَا تَجِدُونَ حَدَّ الزَّانِي فِي كِتَابِكُمْ ‏"‏ ‏.‏ قَالَ لاَ وَلَوْلاَ أَنَّكَ نَشَدْتَنِي بِهَذَا لَمْ أُخْبِرْكَ نَجِدُهُ الرَّجْمَ وَلَكِنَّهُ كَثُرَ فِي أَشْرَافِنَا فَكُنَّا إِذَا أَخَذْنَا الشَّرِيفَ تَرَكْنَاهُ وَإِذَا أَخَذْنَا الضَّعِيفَ أَقَمْنَا عَلَيْهِ الْحَدَّ قُلْنَا تَعَالَوْا فَلْنَجْتَمِعْ عَلَى شَىْءٍ نُقِيمُهُ عَلَى الشَّرِيفِ وَالْوَضِيعِ فَجَعَلْنَا التَّحْمِيمَ وَالْجَلْدَ مَكَانَ الرَّجْمِ ‏.‏ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏"‏ اللَّهُمَّ إِنِّي أَوَّلُ مَنْ أَحْيَا أَمْرَكَ إِذْ أَمَاتُوهُ ‏"‏ ‏.‏ فَأَمَرَ بِهِ فَرُجِمَ فَأَنْزَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ ‏{‏ يَا أَيُّهَا الرَّسُولُ لاَ يَحْزُنْكَ الَّذِينَ يُسَارِعُونَ فِي الْكُفْرِ‏}‏ إِلَى قَوْلِهِ ‏{‏ إِنْ أُوتِيتُمْ هَذَا فَخُذُوهُ‏}‏ يَقُولُ ائْتُوا مُحَمَّدًا صلى الله عليه وسلم فَإِنْ أَمَرَكُمْ بِالتَّحْمِيمِ وَالْجَلْدِ فَخُذُوهُ وَإِنْ أَفْتَاكُمْ بِالرَّجْمِ فَاحْذَرُوا ‏.‏ فَأَنْزَلَ اللَّهُ تَعَالَى ‏{‏ وَمَنْ لَمْ يَحْكُمْ بِمَا أَنْزَلَ اللَّهُ فَأُولَئِكَ هُمُ الْكَافِرُونَ‏}‏ ‏{‏ وَمَنْ لَمْ يَحْكُمْ بِمَا أَنْزَلَ اللَّهُ فَأُولَئِكَ هُمُ الظَّالِمُونَ‏}‏ ‏{‏ وَمَنْ لَمْ يَحْكُمْ بِمَا أَنْزَلَ اللَّهُ فَأُولَئِكَ هُمُ الْفَاسِقُونَ‏}‏ فِي الْكُفَّارِ كُلُّهَا ‏.‏
அல்பராஃ பின் ஆஸிப் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

முகம் கறுக்கப்பட்டு, கசையடி கொடுக்கப்பட்ட ஒரு யூதர் நபி (ஸல்) அவர்கள் வழியாகக் கொண்டு செல்லப்பட்டார். நபி (ஸல்) அவர்கள் அவர்களை (யூதர்களை) அழைத்து, "விபச்சாரம் செய்தவருக்கான தண்டனையை உங்கள் வேதத்தில் இவ்வாறா காண்கிறீர்கள்?" என்று கேட்டார்கள். அவர்கள் "ஆம்" என்றார்கள்.

நபி (ஸல்) அவர்கள் அவர்களிலுள்ள ஓர் அறிஞரை அழைத்து, "மூஸா மீது தவ்ராத் வேதத்தை அருளியவன் மீது ஆணையாக உன்னிடம் கேட்கிறேன்; விபச்சாரம் செய்தவருக்கான தண்டனையை உங்கள் வேதத்தில் இவ்வாறா காண்கிறீர்கள்?" என்று கேட்டார்கள். அதற்கு அவர், "இல்லை; நீர் இவ்வாறு (அல்லாஹ்வின் மீது ஆணையாக) என்னிடம் கேட்டிருக்காவிட்டால் நான் உமக்குத் தெரிவித்திருக்கமாட்டேன். (எங்கள் வேதத்தில்) அதற்கான தண்டனையாக 'ரஜ்ம்' (கல்லெறிந்து கொல்லுதல்) இருப்பதையே நாங்கள் காண்கிறோம். ஆயினும் எங்கள் மேட்டுக்குடியினரிடம் இக்குற்றம் அதிகரித்துவிட்டது. ஆகவே நாங்கள் எங்களில் மதிப்புமிக்க ஒருவரைப் பிடிக்கும்போது அவரை விட்டுவிடுவோம்; பலவீனரைப் பிடித்தால் அவர்மீது தண்டனையை நிறைவேற்றுவோம். (எனவே) 'மேட்டுக்குடியினர், சாமானியர் ஆகிய இருசாரார் மீதும் நாம் நிறைவேற்றக்கூடிய ஒரு தண்டனைக்கு ஒன்றிணைவோம்' என்று நாங்கள் பேசிக்கொண்டோம். ஆகவே கல்லெறிதலுக்குப் பகரமாக முகத்தைக் கறுக்குவதையும் (தஹ்மீம்), கசையடி கொடுப்பதையும் (ஜல்த்) ஆக்கிக்கொண்டோம்" என்றார்.

அப்போது ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள், "அல்லாஹும்ம இன்னீ அவ்வலு மன் அஹ்யா அம்ரக இத அமாத்தூஹு" (யா அல்லாஹ்! அவர்கள் உன்னுடைய கட்டளையை மரிக்கச் செய்தபோது, அதை உயிர்ப்பித்த முதல் ஆள் நானே) என்று கூறினார்கள். பிறகு நபி (ஸல்) அவர்கள் அவருக்குக் கட்டளையிட, அவர் கல்லெறிந்து கொல்லப்பட்டார்.

அப்போது அல்லாஹ் (பின்வரும் வசனத்தை) அருளினான்: {யா அய்யுஹர் ரஸூலு லா யஹ்ஸுன்கல்லதீன யுஸாரிஊன ஃபில் குஃப்ரி...} (பொருள்: தூதரே! இறைமறுப்பில் போட்டி போட்டுக் கொண்டு செல்வோர் குறித்து நீர் கவலைப்பட வேண்டாம்...) என்பது முதல் {இன் ஊதீதும் ஹாதா ஃபகுதூஹு} (...இது உங்களுக்கு வழங்கப்பட்டால் அதை எடுத்துக்கொள்ளுங்கள்) என்பது வரை.

அவர்கள் (தங்களுக்குள்), "முஹம்மதிடம் செல்லுங்கள்; அவர் உங்களுக்கு 'முகத்தைக் கறுக்குவதையும் கசையடியையும்' (தீர்ப்பாகக்) கட்டளையிட்டால் அதை ஏற்றுக்கொள்ள்ளுங்கள். அவர் உங்களுக்கு 'கல்லெறிந்து கொல்லுதல்' (ரஜ்ம்) குறித்து தீர்ப்பளித்தால் (அவரிடமிருந்து) எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள்" என்று கூறிக் கொண்டனர்.

அப்போது அல்லாஹ் பின்வரும் வசனங்களை அருளினான்:
{வமன் லம் யஹ்கும் பிமா அன்ஸலல்லாஹு ஃபஉலாஇக்க ஹுமுல் காஃபிரூன்} ("மேலும், அல்லாஹ் அருளியதைக் கொண்டு யார் தீர்ப்பளிக்கவில்லையோ அவர்கள் காஃபிர்கள் (இறைமறுப்பாளர்கள்) ஆவர்");
{வமன் லம் யஹ்கும் பிமா அன்ஸலல்லாஹு ஃபஉலாஇக்க ஹுமுல் ழாலிமூன்} ("மேலும், அல்லாஹ் அருளியதைக் கொண்டு யார் தீர்ப்பளிக்கவில்லையோ அவர்கள் ழாலிம்கள் (அநீதியிழைப்பவர்கள்) ஆவர்");
{வமன் லம் யஹ்கும் பிமா அன்ஸலல்லாஹு ஃபஉலாஇக்க ஹுமுல் ஃபாஸிகூன்} ("மேலும், அல்லாஹ் அருளியதைக் கொண்டு யார் தீர்ப்பளிக்கவில்லையோ அவர்கள் ஃபாஸிக்குகள் (குற்றவாளிகள்) ஆவர்").

இவை அனைத்தும் இறைமறுப்பாளர்கள் (குஃப்பார்கள்) விஷயத்தில்தான் இறங்கின.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
3626சுனன் அபூதாவூத்
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا عَبْدُ الأَعْلَى، حَدَّثَنَا سَعِيدٌ، عَنْ قَتَادَةَ، عَنْ عِكْرِمَةَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ لَهُ يَعْنِي لاِبْنِ صُورِيَا ‏ ‏ أُذَكِّرُكُمْ بِاللَّهِ الَّذِي نَجَّاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ وَأَقْطَعَكُمُ الْبَحْرَ وَظَلَّلَ عَلَيْكُمُ الْغَمَامَ وَأَنْزَلَ عَلَيْكُمُ الْمَنَّ وَالسَّلْوَى وَأَنْزَلَ عَلَيْكُمُ التَّوْرَاةَ عَلَى مُوسَى أَتَجِدُونَ فِي كِتَابِكُمُ الرَّجْمَ ‏ ‏ ‏.‏ قَالَ ذَكَّرْتَنِي بِعَظِيمٍ وَلاَ يَسَعُنِي أَنْ أَكْذِبَكَ ‏.‏ وَسَاقَ الْحَدِيثَ ‏.‏
இக்ரிமா (ரஹ்) அவர்கள் அறிவித்தார்கள்:

நபி (ஸல்) அவர்கள் இப்னு ஸூரியாவிடம் கூறினார்கள்: "ஃபிர்அவ்னின் மக்களிடமிருந்து உங்களைக் காப்பாற்றி, உங்களைக் கடலைக் கடக்கச் செய்து, மேகங்களின் நிழலை உங்களுக்குக் கொடுத்து, உங்களுக்கு 'மன்னா'வையும் காடைகளையும் இறக்கிவைத்து, மூஸா (அலை) அவர்களுக்கு தவ்ராத்தை இறக்கிவைத்த அத்தகைய அல்லாஹ்வைக் கொண்டு நான் உங்களுக்கு நினைவூட்டுகிறேன்; (விபச்சாரத்திற்காக) கல்லெறிந்து கொல்லும் தண்டனையை உங்கள் வேதத்தில் காண்கிறீர்களா?"

அதற்கு அவர் கூறினார்: "மகத்தான ஒரு (சத்தியத்தைக் கொண்டு) எனக்கு நினைவூட்டிவிட்டீர்கள். உங்களிடம் பொய் சொல்வது எனக்குச் சாத்தியமில்லை." பின்னர் அவர் ஹதீஸின் மீதமுள்ள பகுதியை அறிவித்தார்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (அல்பானி)
صحيح (الألباني)
4448சுனன் அபூதாவூத்
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْعَلاَءِ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُرَّةَ، عَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ، قَالَ مُرَّ عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم بِيَهُودِيٍّ مُحَمَّمٍ مَجْلُودٍ فَدَعَاهُمْ فَقَالَ ‏"‏ هَكَذَا تَجِدُونَ حَدَّ الزَّانِي ‏"‏ ‏.‏ فَقَالُوا نَعَمْ ‏.‏ فَدَعَا رَجُلاً مِنْ عُلَمَائِهِمْ قَالَ لَهُ ‏"‏ نَشَدْتُكَ بِاللَّهِ الَّذِي أَنْزَلَ التَّوْرَاةَ عَلَى مُوسَى هَكَذَا تَجِدُونَ حَدَّ الزَّانِي فِي كِتَابِكُمْ ‏"‏ ‏.‏ فَقَالَ اللَّهُمَّ لاَ وَلَوْلاَ أَنَّكَ نَشَدْتَنِي بِهَذَا لَمْ أُخْبِرْكَ نَجِدُ حَدَّ الزَّانِي فِي كِتَابِنَا الرَّجْمَ وَلَكِنَّهُ كَثُرَ فِي أَشْرَافِنَا فَكُنَّا إِذَا أَخَذْنَا الرَّجُلَ الشَّرِيفَ تَرَكْنَاهُ وَإِذَا أَخَذْنَا الرَّجُلَ الضَّعِيفَ أَقَمْنَا عَلَيْهِ الْحَدَّ فَقُلْنَا تَعَالَوْا فَنَجْتَمِعَ عَلَى شَىْءٍ نُقِيمُهُ عَلَى الشَّرِيفِ وَالْوَضِيعِ فَاجْتَمَعْنَا عَلَى التَّحْمِيمِ وَالْجَلْدِ وَتَرَكْنَا الرَّجْمَ ‏.‏ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏"‏ اللَّهُمَّ إِنِّي أَوَّلُ مَنْ أَحْيَا أَمْرَكَ إِذْ أَمَاتُوهُ ‏"‏ ‏.‏ فَأَمَرَ بِهِ فَرُجِمَ فَأَنْزَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ ‏{‏ يَا أَيُّهَا الرَّسُولُ لاَ يَحْزُنْكَ الَّذِينَ يُسَارِعُونَ فِي الْكُفْرِ ‏}‏ إِلَى قَوْلِهِ ‏{‏ يَقُولُونَ إِنْ أُوتِيتُمْ هَذَا فَخُذُوهُ وَإِنْ لَمْ تُؤْتَوْهُ فَاحْذَرُوا ‏}‏ إِلَى قَوْلِهِ ‏{‏ وَمَنْ لَمْ يَحْكُمْ بِمَا أَنْزَلَ اللَّهُ فَأُولَئِكَ هُمُ الْكَافِرُونَ ‏}‏ فِي الْيَهُودِ إِلَى قَوْلِهِ ‏{‏ وَمَنْ لَمْ يَحْكُمْ بِمَا أَنْزَلَ اللَّهُ فَأُولَئِكَ هُمُ الظَّالِمُونَ ‏}‏ فِي الْيَهُودِ إِلَى قَوْلِهِ ‏{‏ وَمَنْ لَمْ يَحْكُمْ بِمَا أَنْزَلَ اللَّهُ فَأُولَئِكَ هُمُ الْفَاسِقُونَ ‏}‏ قَالَ هِيَ فِي الْكُفَّارِ كُلُّهَا يَعْنِي هَذِهِ الآيَةَ ‏.‏
அல்பராஃ பின் ஆஸிப் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
மக்கள் ஒரு யூதரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முன்பு கடந்து சென்றனர். அந்த யூதரின் முகம் கரியால் கறுப்பாக்கப்பட்டு, கசையடி கொடுக்கப்பட்டுக் கொண்டிருந்தது. அவர்களை அழைத்த நபி (ஸல்) அவர்கள், “விபச்சாரம் செய்தவருக்கு இதுதான் விதிக்கப்பட்ட தண்டனையா?” என்று கேட்டார்கள்.

அவர்கள், “ஆம்” என்றார்கள். பின்னர் நபி (ஸல்) அவர்கள் அவர்களில் உள்ள ஒரு அறிஞரை அழைத்து, “மூஸா (அலை) அவர்களுக்கு தவ்ராத்தை அருளிய அல்லாஹ்வின் மீது ஆணையிட்டுக் கேட்கிறேன், உங்கள் இறைவேதத்தில் விபச்சாரம் செய்தவருக்கு இதுதான் விதிக்கப்பட்ட தண்டனை என்று காண்கிறீர்களா?” என்று கேட்டார்கள்.

அதற்கு அவர், “அல்லாஹ்வின் மீது ஆணையாக, இல்லை. நீங்கள் இதைப் பற்றி என்னிடம் (அல்லாஹ்வின் மீது) ஆணையிட்டுக் கேட்காமல் இருந்திருந்தால், நான் உங்களுக்குத் தெரிவித்திருக்க மாட்டேன். எங்கள் இறைவேதத்தில் விபச்சாரம் செய்தவருக்கு ‘ரஜ்ம்’ (கல்லெறி) தண்டனை விதிக்கப்பட்டிருப்பதை நாங்கள் காண்கிறோம். ஆனால் எங்கள் மக்களில் உயர்ந்த அந்தஸ்தில் உள்ளவர்களிடையே அது (விபச்சாரம்) அதிகமாகியது; எனவே, நாங்கள் உயர்ந்த அந்தஸ்தில் உள்ள ஒருவரைப் பிடித்தால், அவரை விட்டுவிடுவோம்; பலவீனமான ஒருவரைப் பிடித்தால், அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறைவேற்றுவோம். எனவே நாங்கள், ‘வாருங்கள், உயர்ந்த மற்றும் தாழ்ந்த அந்தஸ்தில் உள்ள மக்களுக்கு சமமாக அமல்படுத்தக்கூடிய ஒன்றில் உடன்படுவோம்’ என்று பேசிக்கொண்டோம். எனவே, (கல்லெறி தண்டனையைக் கைவிட்டு) ஒரு குற்றவாளியின் முகத்தை கரியால் கறுப்பாக்கி, அவருக்கு கசையடி கொடுக்க நாங்கள் ஒப்புக்கொண்டோம்” என்று கூறினார்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அல்லாஹும்ம இன்னீ அவ்வலு மன் அஹ்யா அம்ரக இது அமாத்தூஹு” (யா அல்லாஹ்! இவர்கள் உனது கட்டளையைச் சாகடித்துவிட்ட நிலையில், அதற்கு உயிர் கொடுத்தவர்களில் நானே முதன்மையானவன்) என்று கூறினார்கள். பிறகு அ(ந்த யூத)வரைப் பற்றிக் கட்டளையிட்டார்கள்; அவர் கல்லெறிந்து கொல்லப்பட்டார்.

பின்னர் அல்லாஹ் (திருக்குர்ஆனில்) இறக்கியருளினான்: “யா அய்யுஹர் ரஸூல் லா யஹ்ஜுன்கல்லதீன யுஸாரிஊன ஃபில் குஃப்ர்...” (தூதரே! இறைமறுப்பை நோக்கி விரைந்து செல்பவர்கள் உம்மைக் கவலையடையச் செய்ய வேண்டாம்...) என்பது முதல், “...யகூழூன இன் ஊதீதும் ஹாதா ஃபகுதூஹு வஇல்லம் துஃதவ்ஹு ஃபஹ்தரூ” (...அவர்கள் கூறுகிறார்கள்: உங்களுக்கு இது கொடுக்கப்பட்டால், அதை எடுத்துக் கொள்ளுங்கள்; இல்லையென்றால், எச்சரிக்கையாக இருங்கள்!...) என்பது வரை; யூதர்கள் விஷயத்தில் “...வமன் லம் யஹ்கும் பிமா அன்ஸலல்லாஹு ஃபாஉலாஇக ஹுமுல் காஃபிரூன்” (...மேலும், அல்லாஹ் அருளியதைக் கொண்டு எவர்கள் தீர்ப்பளிக்கவில்லையோ, அவர்கள் இறைமறுப்பாளர்களே ஆவார்கள்) என்பது வரை; யூதர்கள் விஷயத்தில் “...ஃபாஉலாஇக ஹுமுல் ழாலிமூன்” (...அவர்கள் அநியாயக்காரர்களே ஆவார்கள்) என்பது வரை; மற்றும் “...ஃபாஉலாஇக ஹுமுல் ஃபாஸிகூன்” (...அவர்கள் பாவிகளே ஆவார்கள்) வரையிலான வசனங்களை அருளினான். (அறிவிப்பாளர்) கூறினார்: இவ்வசனங்கள் அனைத்தும் இறைமறுப்பாளர்களைப் பற்றியே (அருளப்பட்டன).
ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (அல்பானி)
صحيح (الألباني)
4450சுனன் அபூதாவூத்
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ حَدَّثَنَا رَجُلٌ، مِنْ مُزَيْنَةَ ح وَحَدَّثَنَا أَحْمَدُ بْنُ صَالِحٍ، حَدَّثَنَا عَنْبَسَةُ، حَدَّثَنَا يُونُسُ، قَالَ قَالَ مُحَمَّدُ بْنُ مُسْلِمٍ سَمِعْتُ رَجُلاً، مِنْ مُزَيْنَةَ مِمَّنْ يَتَّبِعُ الْعِلْمَ وَيَعِيهِ - ثُمَّ اتَّفَقَا - وَنَحْنُ عِنْدَ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ فَحَدَّثَنَا عَنْ أَبِي هُرَيْرَةَ - وَهَذَا حَدِيثُ مَعْمَرٍ وَهُوَ أَتَمُّ - قَالَ زَنَى رَجُلٌ مِنَ الْيَهُودِ وَامْرَأَةٌ فَقَالَ بَعْضُهُمْ لِبَعْضٍ اذْهَبُوا بِنَا إِلَى هَذَا النَّبِيِّ فَإِنَّهُ نَبِيٌّ بُعِثَ بِالتَّخْفِيفِ فَإِنْ أَفْتَانَا بِفُتْيَا دُونَ الرَّجْمِ قَبِلْنَاهَا وَاحْتَجَجْنَا بِهَا عِنْدَ اللَّهِ قُلْنَا فُتْيَا نَبِيٍّ مِنْ أَنْبِيَائِكَ - قَالَ - فَأَتَوُا النَّبِيَّ صلى الله عليه وسلم وَهُوَ جَالِسٌ فِي الْمَسْجِدِ فِي أَصْحَابِهِ فَقَالُوا يَا أَبَا الْقَاسِمِ مَا تَرَى فِي رَجُلٍ وَامْرَأَةٍ زَنَيَا فَلَمْ يُكَلِّمْهُمْ كَلِمَةً حَتَّى أَتَى بَيْتَ مِدْرَاسِهِمْ فَقَامَ عَلَى الْبَابِ فَقَالَ ‏"‏ أَنْشُدُكُمْ بِاللَّهِ الَّذِي أَنْزَلَ التَّوْرَاةَ عَلَى مُوسَى مَا تَجِدُونَ فِي التَّوْرَاةِ عَلَى مَنْ زَنَى إِذَا أُحْصِنَ ‏"‏ ‏.‏ قَالُوا يُحَمَّمُ وَيُجَبَّهُ وَيُجْلَدُ - وَالتَّجْبِيَةُ أَنْ يُحْمَلَ الزَّانِيَانِ عَلَى حِمَارٍ وَتُقَابَلَ أَقْفِيَتُهُمَا وَيُطَافَ بِهِمَا - قَالَ وَسَكَتَ شَابٌّ مِنْهُمْ فَلَمَّا رَآهُ النَّبِيُّ صلى الله عليه وسلم سَكَتَ أَلَظَّ بِهِ النِّشْدَةَ فَقَالَ اللَّهُمَّ إِذْ نَشَدْتَنَا فَإِنَّا نَجِدُ فِي التَّوْرَاةِ الرَّجْمَ ‏.‏ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏"‏ فَمَا أَوَّلُ مَا ارْتَخَصْتُمْ أَمْرَ اللَّهِ ‏"‏ ‏.‏ قَالَ زَنَى ذُو قَرَابَةٍ مَعَ مَلِكٍ مِنْ مُلُوكِنَا فَأَخَّرَ عَنْهُ الرَّجْمَ ثُمَّ زَنَى رَجُلٌ فِي أُسْرَةٍ مِنَ النَّاسِ فَأَرَادَ رَجْمَهُ فَحَالَ قَوْمُهُ دُونَهُ وَقَالُوا لاَ يُرْجَمُ صَاحِبُنَا حَتَّى تَجِيءَ بِصَاحِبِكَ فَتَرْجُمَهُ فَاصْطَلَحُوا عَلَى هَذِهِ الْعُقُوبَةِ بَيْنَهُمْ ‏.‏ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏"‏ فَإِنِّي أَحْكُمُ بِمَا فِي التَّوْرَاةِ ‏"‏ ‏.‏ فَأَمَرَ بِهِمَا فَرُجِمَا ‏.‏ قَالَ الزُّهْرِيُّ فَبَلَغَنَا أَنَّ هَذِهِ الآيَةَ نَزَلَتْ فِيهِمْ ‏{‏ إِنَّا أَنْزَلْنَا التَّوْرَاةَ فِيهَا هُدًى وَنُورٌ يَحْكُمُ بِهَا النَّبِيُّونَ الَّذِينَ أَسْلَمُوا ‏}‏ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم مِنْهُمْ ‏.‏
அபூஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: (இது மஅமர் அவர்களின் அறிவிப்பாகும்; இதுவே முழுமையானது). யூதர்களில் ஒரு ஆணும் ஒரு பெண்ணும் விபச்சாரம் செய்தனர். அவர்களில் சிலர் (மற்றவர்களிடம்), "இந்த நபியிடம் வாருங்கள் (செல்வோம்); ஏனெனில் அவர் (சட்டங்களை) எளிதாக்குபவராக அனுப்பப்பட்டுள்ளார். அவர் நமக்குக் கல்லெறி தண்டனையை (ரஜ்ம்) விடக் குறைவான ஒரு தீர்ப்பை வழங்கினால், அதை நாம் ஏற்றுக்கொள்வோம்; மேலும் அல்லாஹ்விடம், 'உன்னுடைய நபிமார்களில் ஒரு நபியின் தீர்ப்பையே (நாங்கள் பின்பற்றினோம்)' என்று அதைக் கொண்டு வாதாடுவோம்" என்று கூறினார்கள். ஆகவே, அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்தனர். அண்ணலார் தம் தோழர்களுடன் பள்ளிவாசலில் அமர்ந்திருந்தார்கள். அவர்கள், "அபுல் காசிமே! விபச்சாரம் செய்த ஓர் ஆண் மற்றும் ஒரு பெண்ணைப் பற்றி தாங்கள் என்ன கருதுகிறீர்கள்?" என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் அவர்களது 'பைத்துல் மித்ராஸ்' (வேதக் கல்விக்கூடம்) வரும் வரை அவர்களுடன் ஒரு வார்த்தையும் பேசவில்லை. பிறகு அதன் வாசலில் நின்று, "மூஸா மீது தவ்ராத்தை அருளிய அல்லாஹ்வின் மீது ஆணையாக உங்களைக் கேட்கிறேன்; திருமணம் முடித்தவர் (முஹ்சன்) விபச்சாரம் செய்தால் தவ்ராத்தில் என்ன (தண்டனையைக்) காண்கிறீர்கள்?" என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், "முகத்தில் கரி பூசப்படும்; (முதுகோடு முதுகு ஒட்டி) கழுதையில் ஊர்வலமாகக் கொண்டு செல்லப்படுவான்; சாட்டையடி கொடுக்கப்படும்" என்று கூறினார்கள். (அறிவிப்பாளர் விளக்கம்: விபச்சாரம் செய்த இருவரையும் கழுதையின் மீது முதுகோடு முதுகு ஒட்டியவாறு அமரவைத்து ஊர்வலமாகச் சுற்றுவதே 'தஜ்பியா' ஆகும்). அவர்களில் ஓர் இளைஞன் அமைதியாக இருந்தான். நபி (ஸல்) அவர்கள் அவனிடம் அமைதியாக இருப்பதைப் பார்த்து அந்த ஆணையை வலியுறுத்திக் கேட்டபோது, அவன் "அல்லாஹ்வின் மீது ஆணையாக! நீங்கள் எங்களிடம் வலியுறுத்திக் கேட்டதால் (சொல்கிறோம்); நிச்சயமாக தவ்ராத்தில் கல்லெறி தண்டனையை (ரஜ்ம்) நாங்கள் காண்கிறோம்" என்று கூறினான். நபி (ஸல்) அவர்கள், "அப்படியானால், அல்லாஹ்வின் கட்டளையில் முதலாவதாக நீங்கள் எப்போது சலுகை எடுத்துக்கொண்டீர்கள்?" என்று கேட்டார்கள். அவன் கூறினான்: "எங்கள் அரசர்களில் ஒருவரின் உறவினர் விபச்சாரம் செய்தார்; ஆனால் அவருக்கு கல்லெறி தண்டனை நிறைவேற்றுவதை (மக்கள்) தாமதப்படுத்தினர் (கைவிட்டனர்). பிறகு, சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் விபச்சாரம் செய்தார். அவருக்கு கல்லெறி தண்டனை நிறைவேற்ற நாடினார்கள். ஆனால் அவரது உறவினர்கள் தடுத்து, 'எங்கள் தோழரை நீங்கள் கல்லெறிந்து கொல்ல வேண்டுமானால், உங்கள் தோழரையும் (அந்த அரச குடும்பத்தவரையும்) கொண்டு வாருங்கள்; அவரையும் கல்லெறிவோம். (இல்லையேல் விடமாட்டோம்)' என்று கூறினார்கள். ஆகவே, (அனைவருக்கும் பொதுவான) இந்தத் தண்டனையின் மீது அவர்கள் தங்களுக்குள் சமரசம் செய்து கொண்டார்கள்." நபி (ஸல்) அவர்கள், "அப்படியானால், தவ்ராத்தில் உள்ளபடியே நான் தீர்ப்பளிக்கிறேன்" என்று கூறினார்கள். பிறகு அவ்விருவரையும் தண்டிக்குமாறு கட்டளையிட்டார்கள்; அவர்கள் கல்லெறியப்பட்டார்கள். அஸ்-ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: இந்த வசனம் அவர்களைப் பற்றி அருளப்பட்டது என்று எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது: "{நிச்சயமாக நாமே தவ்ராத்தை அருளினோம்: அதில் நேர்வழியும் ஒளியும் இருந்தது. (அல்லாஹ்வுக்கு) அடிபணிந்த நபிமார்கள் அதைக் கொண்டே தீர்ப்பளித்தார்கள்...}" (அல்குர்ஆன் 5:44). நபி (ஸல்) அவர்களும் அவர்களில் (அந்த நபிமார்களில்) ஒருவராவார்.
ஹதீஸ் தரம் : ளயீஃப் (அல்பானி)
ضعيف (الألباني)
2558சுனன் இப்னுமாஜா
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُرَّةَ، عَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ، قَالَ مَرَّ النَّبِيُّ بِيَهُودِيٍّ مُحَمَّمٍ مَجْلُودٍ فَدَعَاهُمْ فَقَالَ ‏"‏ هَكَذَا تَجِدُونَ فِي كِتَابِكُمْ حَدَّ الزَّانِي ‏"‏ ‏.‏ قَالُوا نَعَمْ ‏.‏ فَدَعَا رَجُلاً مِنْ عُلَمَائِهِمْ فَقَالَ ‏"‏ أَنْشُدُكَ بِاللَّهِ الَّذِي أَنْزَلَ التَّوْرَاةَ عَلَى مُوسَى أَهَكَذَا تَجِدُونَ حَدَّ الزَّانِي قَالَ لاَ وَلَوْلاَ أَنَّكَ نَشَدْتَنِي لَمْ أُخْبِرْكَ نَجِدُ حَدَّ الزَّانِي فِي كِتَابِنَا الرَّجْمَ وَلَكِنَّهُ كَثُرَ فِي أَشْرَافِنَا فَكُنَّا إِذَا أَخَذْنَا الشَّرِيفَ تَرَكْنَاهُ وَكُنَّا إِذَا أَخَذْنَا الضَّعِيفَ أَقَمْنَا عَلَيْهِ الْحَدَّ ‏.‏ فَقُلْنَا تَعَالَوْا فَلْنَجْتَمِعْ عَلَى شَىْءٍ نُقِيمُهُ عَلَى الشَّرِيفِ وَالْوَضِيعِ فَاجْتَمَعْنَا عَلَى التَّحْمِيمِ وَالْجَلْدِ مَكَانَ الرَّجْمِ ‏.‏ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم اللَّهُمَّ إِنِّي أَوَّلُ مَنْ أَحْيَا أَمْرَكَ إِذْ أَمَاتُوهُ ‏"‏ ‏.‏ وَأَمَرَ بِهِ فَرُجِمَ ‏.‏
பராஃ பின் ஆஸிப் (ரழி) அவர்கள் கூறினார்கள்:

நபி (ஸல்) அவர்கள், முகம் கருமையாக்கப்பட்டு கசையடி கொடுக்கப்பட்ட ஒரு யூதரைக் கடந்து சென்றார்கள். அவர்கள் (யூதர்களை) அழைத்து, "உங்கள் வேதத்தில் விபச்சாரம் செய்தவருக்கான தண்டனையை இவ்வாறா நீங்கள் காண்கிறீர்கள்?" என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், "ஆம்" என்றனர்.

பிறகு அவர்கள், அவர்களுடைய அறிஞர்களில் ஒருவரை அழைத்து, "மூஸாவுக்கு தவ்ராத்தை அருளிய அல்லாஹ்வின் மீது ஆணையாக உன்னிடம் கேட்கிறேன்! உங்கள் வேதத்தில் விபச்சாரம் செய்தவருக்கான தண்டனையை இவ்வாறா நீங்கள் காண்கிறீர்கள்?" என்று கேட்டார்கள்.

அதற்கு அவர், "இல்லை; நீங்கள் அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு என்னிடம் கேட்காமல் இருந்திருந்தால், நான் உங்களுக்குச் சொல்லியிருக்க மாட்டேன். எங்கள் வேதத்தில் விபச்சாரம் செய்தவருக்கான தண்டனையாக நாங்கள் காண்பது கல்லெறிந்து கொல்லுதல் (ரஜ்ம்) ஆகும். ஆனால், எங்களுடைய உயர் குடியினரிடையே இக்குற்றம் அதிகமானபோது, நாங்கள் உயர் குடியினரில் ஒருவரைப் பிடித்தால் அவரை விட்டுவிடுவோம்; எங்களில் உள்ள பலவீனமான ஒருவரை நாங்கள் பிடித்தால், அவர் மீது தண்டனையை நிறைவேற்றுவோம்.

ஆகவே நாங்கள், 'வாருங்கள், உயர் குடியினர் மற்றும் சாமானியர் ஆகிய இருவர் மீதும் நாம் நிறைவேற்றக்கூடிய ஒரு விஷயத்தில் ஒன்றிணைவோம்' என்று பேசிக்கொண்டோம். எனவே, கல்லெறிந்து கொல்லுவதற்குப் பதிலாக, (முகத்தைக்) கருமையாக்கி, கசையடி கொடுப்பதற்கு நாங்கள் ஒப்புக்கொண்டோம்" என்றார்.

அப்போது நபி (ஸல்) அவர்கள், "அல்லாஹும்ம இன்னீ அவ்வலு மன் அஹ்யா அம்ரக இத் அமாத்தூஹு" (யா அல்லாஹ்! அவர்கள் உனது கட்டளையைச் சாகடித்தபோது, அதை உயிர்ப்பித்தவர்களில் நான் முதன்மையானவன்) என்று கூறி, (அந்த மனிதரை) கல்லெறிந்து கொல்லுமாறு கட்டளையிட்டார்கள்; அவ்வாறே அவர் கல்லெறிந்து கொல்லப்பட்டார்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (தாருஸ்ஸலாம் பதிப்பு)
18525முஸ்னது அஹ்மத்
حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ حَدَّثَنَا الْأَعْمَشُ عَنْ عَبْدِ اللهِ بْنِ مُرَّةَ عَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ قَالَ مُرَّ عَلَى رَسُولِ اللهِ ﷺ بِيَهُودِيٍّمُحَمَّمٍ مَجْلُودٍ فَدَعَاهُمْ فَقَالَ أَهَكَذَا تَجِدُونَ حَدَّ الزَّانِي فِي كِتَابِكُمْ؟ فَقَالُوا نَعَمْ قَالَ فَدَعَا رَجُلًا مِنْ عُلَمَائِهِمْ فَقَالَ أَنْشُدُكَ بِاللهِ الَّذِي أَنْزَلَ التَّوْرَاةَ عَلَى مُوسَى أَهَكَذَا تَجِدُونَ حَدَّ الزَّانِي فِي كِتَابِكُمْ؟ فَقَالَ لَا وَاللهِ وَلَوْلَا أَنَّكَ أَنْشَدْتَنِي بِهَذَا لَمْ أُخْبِرْكَ نَجِدُ حَدَّ الزَّانِي فِي كِتَابِنَا الرَّجْمَ وَلَكِنَّهُ كَثُرَ فِي أَشْرَافِنَا فَكُنَّا إِذَا أَخَذْنَا الشَّرِيفَ تَرَكْنَاهُ وَإِذَا أَخَذْنَا الضَّعِيفَ أَقَمْنَا عَلَيْهِ الْحَدَّ فَقُلْنَا تَعَالَوْا حَتَّى نَجْعَلَ شَيْئًا نُقِيمُهُ عَلَى الشَّرِيفِ وَالْوَضِيعِ فَاجْتَمَعْنَا عَلَى التَّحْمِيمِ وَالْجَلْدِ فَقَالَ رَسُولُ اللهِ ﷺ اللهُمَّ إِنِّي أَوَّلُ مَنْ أَحْيَا أَمْرَكَ إِذْ أَمَاتُوهُ قَالَ فَأَمَرَ بِهِ فَرُجِمَ فَأَنْزَلَ اللهُ عَزَّ وَجَلَّ {يَا أَيُّهَا الرَّسُولُ لَا يَحْزُنْكَ الَّذِينَ يُسَارِعُونَ فِي الْكُفْرِ} [المائدة 41] إِلَى قَوْلِهِ {يَقُولُونَ إِنْ أُوتِيتُمْ هَذَا فَخُذُوهُ} [المائدة 41] يَقُولُونَ ائْتُوا مُحَمَّدًا فَإِنْ أَفْتَاكُمْ بِالتَّحْمِيمِ وَالْجَلْدِ فَخُذُوهُ وَإِنْ أَفْتَاكُمْ بِالرَّجْمِ فَاحْذَرُوا إِلَى قَوْلِهِ {وَمَنْ لَمْ يَحْكُمْ بِمَا أَنْزَلَ اللهُ فَأُولَئِكَ هُمُ الْكَافِرُونَ} [المائدة 44] قَالَ فِي الْيَهُودِ إِلَى قَوْلِهِ {وَمَنْ لَمْ يَحْكُمْ بِمَا أَنْزَلَ اللهُ فَأُولَئِكَ هُمُ الظَّالِمُونَ} [المائدة 45] {وَمَنْ لَمْ يَحْكُمْ بِمَا أَنْزَلَ اللهُ فَأُولَئِكَ هُمُ الْفَاسِقُونَ} [المائدة 47] قَالَ هِيَ فِي الْكُفَّارِكُلُّهَا
பராஉ பின் ஆஸிப் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

முகம் கரியாக்கப்பட்டு, சாட்டையடி கொடுக்கப்பட்ட ஒரு யூதன், அல்லாஹ்வின் தூதர் ((ஸல்)) அவர்களைக் கடந்து (அழைத்துச் செல்லப்பட்டபோது) கொண்டு வரப்பட்டான். அப்போது நபி ((ஸல்)) அவர்கள் (அங்கிருந்த யூதர்களை) அழைத்து, "(திருமணமானவர்) விபச்சாரம் செய்தவனுக்கு உங்கள் வேதத்தில் (தவ்ராத்தில்) உள்ள தண்டனை இதுதானா?" என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள் "ஆம்" என்றார்கள்.

பின்னர் அவர்களின் அறிஞர்களில் ஒருவரை நபி ((ஸல்)) அவர்கள் அழைத்து, "மூஸாவுக்குத் தவ்ராத்தை அருளிய அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு உன்னிடம் கேட்கிறேன். (திருமணமானவர்) விபச்சாரம் செய்தவனுக்கு உங்கள் வேதத்தில் உள்ள தண்டனை இதுதானா?" என்று கேட்டார்கள்.

அதற்கு அவர், "இல்லை, அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நீங்கள் இவ்வாறு சத்தியமிட்டுக் கேட்டிருக்காவிட்டால், இதை நான் உங்களுக்குத் தெரிவித்திருக்க மாட்டேன். எங்கள் வேதத்தில் விபச்சாரம் செய்தவனுக்கான தண்டனையாக 'ரஜ்மு' (கல்லெறிந்து கொல்லுதல்) என்பதையே காண்கிறோம். ஆனால், அது எங்கள் உயர்குடி மக்களிடையே அதிகமாகிவிட்டது. எனவே, நாங்கள் ஒரு உயர்குடி நபரைப் பிடித்தால் (தண்டிக்காமல்) அவரை விட்டுவிடுவோம்; எளியவரைப் பிடித்தால் அவர் மீது தண்டனையை நிறைவேற்றுவோம். பின்னர் நாங்கள், 'வாருங்கள், உயர்குடியினருக்கும் எளியோருக்கும் சமமாக நிறைவேற்றும் வகையில் ஒரு (புதிய) தண்டனையை நாம் உருவாக்குவோம்' என்று பேசி, (ரஜ்முக்குப் பதிலாக) முகத்தைக் கரியாக்கி, சாட்டையடி கொடுப்பதை நாங்கள் அனைவரும் ஒன்றுபட்டு (சட்டமாக) ஏற்றுக்கொண்டோம்" என்று கூறினார்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் ((ஸல்)) அவர்கள், "யா அல்லாஹ்! அவர்கள் அழித்துவிட்ட (மறைத்துவிட்ட) உனது கட்டளையை முதன்முதலில் உயிர்ப்பிப்பவன் நானே ஆவேன்" என்று கூறினார்கள். பின்னர் அவர்கள் உத்தரவிட, அவன் (அந்த யூதன்) கல்லெறிந்து கொல்லப்பட்டான்.

அப்போது கண்ணியமும் மகத்துவமும் மிக்க அல்லாஹ், "தூதரே! நிராகரிப்பில் விரைந்து செல்வோரைப் பற்றி நீர் கவலைப்பட வேண்டாம்..." (அல்-மாயிதா: 41) என்பதிலிருந்து "...அவர்கள் கூறுகின்றனர்: இது (முகத்தைக் கரியாக்குதல் போன்ற தீர்ப்பு) உங்களுக்கு வழங்கப்பட்டால் அதை எடுத்துக்கொள்ளுங்கள் (ஏற்றுக்கொள்ளுங்கள்)" (அல்-மாயிதா: 41) என்பது வரை உள்ள வசனங்களை அருளினான். (இதன் விளக்கம்:) 'முஹம்மதிடம் செல்லுங்கள், அவர் முகத்தைக் கரியாக்கி, சாட்டையடி கொடுக்கும் தீர்ப்பை உங்களுக்கு வழங்கினால் அதனை ஏற்றுக்கொள்ளுங்கள்; அவர் கல்லெறியும் தீர்ப்பை வழங்கினால் எச்சரிக்கையாக (விலகி) இருங்கள்' என்று அவர்கள் (தங்களுக்குள்) கூறினர் என்பதாகும்.

மேலும், "அல்லாஹ் அருளியதைக் கொண்டு தீர்ப்பு வழங்காதவர்கள் - அவர்கள் தான் நிராகரிப்பாளர்கள்" (அல்-மாயிதா: 44) என்பது வரை அருளினான். "இது யூதர்களைப் பற்றி இறங்கியது" என்று பராஉ (ரழி) கூறினார்கள்.

பின்னர், "அல்லாஹ் அருளியதைக் கொண்டு தீர்ப்பு வழங்காதவர்கள் - அவர்கள் தான் அநியாயக்காரர்கள்" (அல்-மாயிதா: 45) என்றும், "அல்லாஹ் அருளியதைக் கொண்டு தீர்ப்பு வழங்காதவர்கள் - அவர்கள் தான் பாவிகள்" (அல்-மாயிதா: 47) என்றும் அருளினான். "இந்த வசனங்கள் அனைத்தும் (சத்தியத்தை நிராகரிக்கும்) காஃபிர்களைப் பற்றியே இறங்கின" என்று அவர்கள் கூறினார்கள்.
ஹதீஸ் தரம் : இஸ்னாதுஹு ஸஹீஹ் (இதன் அறிவிப்பாளர் தொடர் ஆதாரபூர்வமானது)
إسناده صحيح
أَخْبَرَنَا أَبُو عَبْدِ اللهِ الْحَافِظُ، وَأَبُو سَعِيدِ بْنُ أَبِي عَمْرٍو، قَالَا: ثنا أَبُو الْعَبَّاسِ مُحَمَّدُ بْنُ يَعْقُوبَ، ثنا أَحْمَدُ بْنُ عَبْدِ الْجَبَّارِ، ثنا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الْأَعْمَشِ، عَنْ عَبْدِ اللهِ بْنِ مُرَّةَ، عَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ، قَالَ: مُرَّ عَلَى النَّبِيِّ ﷺ بِيَهُودِيٍّ مُحَمَّمٍ مَجْذُومٍ، فَدَعَاهُمْ فَقَالَ لَهُمْ: " هَكَذَا تَجِدُونَ حَدَّ الزَّانِي فِي كِتَابِكُمْ؟ " قَالُوا: نَعَمْ، فَدَعَا رَجُلًا مِنْ عُلَمَائِهِمْ فَقَالَ: " أَنْشُدُكَ اللهَ الَّذِي أَنْزَلَ التَّوْرَاةَ عَلَى مُوسَى هَكَذَا تَجِدُونَ حَدَّ الزَّانِي فِي كِتَابِكُمْ؟ " فَقَالَ: اللهُمَّ لَا، وَلَوْلَا أَنَّكَ نَشَدْتَنِي بِهَذَا لَمْ أُخْبِرْكَ، نَجِدُ حَدَّ الزَّانِي فِي كِتَابِنَا الرَّجْمَ، وَلَكِنَّهُ كَثُرَ فِي أَشْرَافِنَا فَكُنَّا إِذَا أَخَذْنَا الشَّرِيفَ تَرَكْنَاهُ، وَإِذَا أَخَذْنَا الضَّعِيفَ أَقَمْنَا عَلَيْهِ الْحَدَّ، فَقُلْنَا: تَعَالَوْا فَلْنَجْتَمِعْ عَلَى شَيْءٍ نُقِيمُهُ عَلَى الشَّرِيفِ وَالضَّعِيفِ، فَاجْتَمَعْنَا عَلَى التَّحْمِيمِ وَالْجَلْدِ مَكَانَ الرَّجْمِ، فَقَالَ رَسُولُ اللهِ ﷺ: " اللهُمَّ إِنِّي أَوَّلُ مَنْ أَحْيَا أَمْرًا إِذْ أَمَاتُوهُ " فَأَمَرَ بِهِ فَرُجِمَ، فَأَنْزَلَ اللهُ عَزَّ وَجَلَّ: {يَا أَيُّهَا الرَّسُولُ لَا يَحْزُنْكَ الَّذِينَ يُسَارِعُونَ فِي الْكُفْرِ} [المائدة: 41]، إِلَى قَوْلِهِ: {يَقُولُونَ إِنْ أُوتِيتُمْ هَذَا فَخُذُوهُ} [المائدة: 41]، يَقُولُونَ: ائْتُوا مُحَمَّدًا فَإِنْ أَفْتَاكُمْ بِالتَّحْمِيمِ وَالْجَلْدِ فَخُذُوهُ، وَإِنْ أَفْتَاكُمْ بِالرَّجْمِ فَاحْذَرُوا، إِلَى قَوْلِهِ: {وَمَنْ لَمْ يَحْكُمْ بِمَا أَنْزَلَ اللهُ فَأُولَئِكَ هُمُ الْكَافِرُونَ} [المائدة: 44]، قَالَ: فِي الْيَهُودِ إِلَى قَوْلِهِ: {وَمَنْ لَمْ يَحْكُمْ بِمَا أَنْزَلَ اللهُ فَأُولَئِكَ هُمُ الظَّالِمُونَ} [المائدة: 45] قَالَ: فِي الْيَهُودِ، قَالَ: قَوْلُهُ: {وَمَنْ لَمْ يَحْكُمْ بِمَا أَنْزَلَ اللهُ فَأُولَئِكَ هُمُ الْفَاسِقُونَ} [المائدة: 47]، قَالَ: فِي الْكُفَّارِ كُلُّهَا رَوَاهُ مُسْلِمٌ فِي الصَّحِيحِ عَنْ يَحْيَى بْنِ يَحْيَى، عَنْ أَبِي مُعَاوِيَةَ
பராஉ பின் ஆஸிப் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

முகம் கரியாக்கப்பட்டு, கசையடி கொடுக்கப்பட்ட (நிலையில்) ஒரு யூதரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் கடந்து (சிலர்) அழைத்துச் சென்றனர். அப்போது அவர்களை அழைத்த நபி (ஸல்) அவர்கள், "விபச்சாரம் செய்தவருக்கான தண்டனை உங்கள் வேதத்தில் (தவ்ராத்தில்) இவ்வாறு தான் உள்ளதா?" என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், "ஆம்" என்றனர்.

பின்னர், அவர்களிலுள்ள அறிஞர் ஒருவரை நபி (ஸல்) அவர்கள் அழைத்து, "மூஸா மீது தவ்ராத்தை அருளிய அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு உன்னிடம் கேட்கிறேன்: விபச்சாரம் செய்தவருக்கான தண்டனை உங்கள் வேதத்தில் இவ்வாறு தான் காணப்படுகிறதா?" என்று கேட்டார்கள்.

அதற்கு அவர், "அல்லாஹ்வின் மீது ஆணையாக! இல்லை. நீங்கள் இவ்வாறு (அல்லாஹ்வின் மீது) ஆணையிட்டுக் கேட்டிருக்காவிட்டால் நான் உங்களுக்கு இதைத் தெரிவித்திருக்க மாட்டேன். விபச்சாரம் செய்தவருக்குரிய தண்டனையாக எங்கள் வேதத்தில் கல்லெறிந்து கொல்லும் தண்டனையே (ரஜ்ம்) உள்ளது. ஆனால், எங்களில் உள்ள உயர்குடியினரிடையே இக்குற்றம் அதிகமாகிவிட்டது. எனவே, உயர்குடியினரை நாங்கள் (குற்றவாளியாகப்) பிடித்தால் அவரை (தண்டிக்காமல்) அப்படியே விட்டுவிடுவோம். எளியவரைப் பிடித்தால் அவர் மீது அத்தண்டனையை (ரஜ்ம்) நிறைவேற்றுவோம். ஆகவே, 'வாருங்கள்! உயர்குடியினர், எளியவர் என இருவர் மீதும் சமமாக நிறைவேற்றக்கூடிய ஒரு தண்டனைக்கு நாம் ஒன்றிணைவோம்' என்று நாங்கள் (பேசி) முடிவெடுத்தோம். அதன்படி, கல்லெறிந்து கொல்வதற்குப் பதிலாக, முகத்தைக் கரியாக்குவது மற்றும் கசையடி கொடுப்பது என்று நாங்கள் (புதிதாக ஒரு சட்டத்தில்) ஒன்றிணைந்தோம்" என்று கூறினார்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "யா அல்லாஹ்! அவர்கள் (யூதர்கள்) அழித்துவிட்ட (மறக்கச் செய்த) உன்னுடைய கட்டளையை முதன்முதலில் உயிர்ப்பிப்பவன் நானே ஆவேன்" என்று கூறிவிட்டு, அவருக்கு (அந்த யூதருக்கு) கல்லெறியும்படி கட்டளையிட்டார்கள்; அவ்வாறே அவர் கல்லெறிந்து கொல்லப்பட்டார்.

அப்போது கண்ணியமும் மகத்துவமும் மிக்க அல்லாஹ், "தூதரே! இறைமறுப்பில் விரைந்து செல்வோர் உம்மைக் கவலையடையச் செய்ய வேண்டாம்..." (அல்குர்ஆன் 5:41) என்பதிலிருந்து, "...இது (முகத்தைக் கரியாக்குவது போன்ற தண்டனை) உங்களுக்கு வழங்கப்பட்டால் அதனைப் பெற்றுக் கொள்ளுங்கள் (கல்லெறிந்து கொல்லும் தண்டனை வழங்கப்பட்டால் அதனைப் புறக்கணித்து விடுங்கள்) என்று அவர்கள் கூறுகின்றனர்" (அல்குர்ஆன் 5:41) என்பது வரை அருளினான். (அதாவது) 'முஹம்மதிடம் செல்லுங்கள்; அவர் முகத்தைக் கரியாக்குவது மற்றும் கசையடி கொடுப்பது என்று தீர்ப்பளித்தால் அதனை ஏற்றுக் கொள்ளுங்கள்; கல்லெறிந்து கொல்ல வேண்டும் என்று தீர்ப்பளித்தால் (அதை ஏற்காமல்) எச்சரிக்கையாக இருங்கள்' என்று அவர்கள் (தங்களுக்குள்) கூறினர்.

மேலும், "அல்லாஹ் அருளியதைக் கொண்டு தீர்ப்பளிக்காதவர்கள் - அவர்களே காஃபிர்கள் (இறைமறுப்பாளர்கள்) ஆவர்" (அல்குர்ஆன் 5:44) என்பது வரை அருளினான்; இது யூதர்களைக் குறித்து இறங்கியது. மேலும், "அல்லாஹ் அருளியதைக் கொண்டு தீர்ப்பளிக்காதவர்கள் - அவர்களே அநியாயக்காரர்கள் ஆவர்" (அல்குர்ஆன் 5:45) என்பதும் யூதர்களைக் குறித்து இறங்கியது. மேலும், "அல்லாஹ் அருளியதைக் கொண்டு தீர்ப்பளிக்காதவர்கள் - அவர்களே பாவிகள் ஆவர்" (அல்குர்ஆன் 5:47) என்பது (ஒட்டுமொத்த) இறைமறுப்பாளர்கள் அனைவரையும் குறித்து இறங்கியது என்று அவர் (அறிவிப்பாளர்) கூறினார்.
ஹதீஸ் தரம் : ஹதீஸ் தரம் கிடைக்கவில்லை
لا نعرف حكم له
أَخْبَرَنَا أَبُو عَبْدِ اللهِ الْحَافِظُ، وَأَبُو سَعِيدِ بْنُ أَبِي عَمْرٍو، قَالَا: ثنا أَبُو الْعَبَّاسِ مُحَمَّدُ بْنُ يَعْقُوبَ، ثنا أَحْمَدُ بْنُ عَبْدِ الْجَبَّارِ، ثنا يُونُسُ بْنُ بُكَيْرٍ، عَنِ ابْنِ إِسْحَاقَ، قَالَ: حَدَّثَنِي الزُّهْرِيُّ، قَالَ: سَمِعْتُ رَجُلًا، مِنْ عُزَيْنَةَ يُحَدِّثُ سَعِيدَ بْنَ الْمُسَيِّبِ، أَنَّ أَبَا هُرَيْرَةَ، حَدَّثَهُمْ، أَنَّ أَحْبَارَ يَهُودَ اجْتَمَعُوا فِي بَيْتِ الْمِدْرَاسِ حِينَ قَدِمَ رَسُولُ اللهِ ﷺ الْمَدِينَةَ، وَقَدْ زَنَى مِنْهُمْ رَجُلٌ بَعْدَ إِحْصَانِهِ بِامْرَأَةٍ مِنَ الْيَهُودِ قَدْ أَحْصَنَتْ، فَقَالَ: انْطَلِقُوا بِهَذَا الرَّجُلِ وَبِهَذِهِ الْمَرْأَةِ إِلَى مُحَمَّدٍ فَسَلُوهُ: كَيْفَ الْحَكَمُ فِيهِمَا؟ وَوَلُّوهُ الْحُكْمَ عَلَيْهِمَا، فَإِنْ عَمِلَ بِعَمَلِكُمْ فِيهِمَا مِنَ التَّجْبِيَةِ، وَهُوَ الْجَلْدُ بِحَبْلٍ مِنْ لِيفٍ مَطْلِيٍّ بِقَارٍ ثُمَّ يُسَوَّدُ وُجُوهُهُمَا ثُمَّ يُحْمَلَانِ عَلَى حِمَارَيْنِ وَيُحَوَّلُ وُجُوهُهُمَا مِنْ قُبُلٍ إِلَى دُبُرِ الْحِمَارِ، فَاتَّبِعُوهُ وَصَدِّقُوهُ، فَإِنَّمَا هُوَ مَلِكٌ، وَإِنْ هُوَ حَكَمَ فِيهِمَا بِالرَّجْمِ، فَاحْذَرُوا عَلَى مَا فِي أَيْدِيكُمْ أَنْ يَسْلُبَكُمُوهُ، فَأَتَوْهُ فَقَالُوا: يَا مُحَمَّدُ هَذَا الرَّجُلُ قَدْ زَنَى بَعْدَ إِحْصَانِهِ بِامْرَأَةٍ قَدْ أَحْصَنْتَ، فَاحْكُمْ فِيهِمَا فَقَدْ وَلَّيْنَاكَ الْحُكْمَ فِيهِمَا، فَمَشَى رَسُولُ اللهِ ﷺ حَتَّى أَتَى أَحْبَارَهُمْ فِي بَيْتِ الْمِدْرَاسِ فَقَالَ: " يَا مَعْشَرَ يَهُودَ أَخْرِجُوا إِلِيَّ أَعْلَمَكُمْ " فَأَخْرَجُوا إِلَيْهِ عَبْدَ اللهِ بْنَ صُورِيَا الْأَعْوَرَ، وَقَدْ رَوَى بَعْضُ بَنِي قُرَيْظَةَ أَنَّهُمْ أَخْرَجُوا إِلَيْهِ يَوْمَئِذٍ مَعَ ابْنِ صُورِيَا أَبَا يَاسِرِ بْنَ أَخْطَبَ وَوَهْبَ بْنَ يَهُوذَا، فَقَالُوا: هَؤُلَاءِ عُلَمَاؤُنَا، فَقَالَ لَهُمْ رَسُولُ اللهِ ﷺ حِينَ خَطِلَ أَمْرُهُمْ، إِلَى أَنْ قَالُوا لِابْنِ صُورِيَا: هَذَا أَعْلَمُ مَنْ بَقِيَ بِالتَّوْرَاةِ، فَخَلَا بِهِ رَسُولُ اللهِ ﷺ، وَكَانَ غُلَامًا شَابًّا مِنْ أَحْدَثِهِمْ سِنًّا، فَأَلَظَّ بِهِ الْمَسْأَلَةَ رَسُولُ اللهِ ﷺ يَقُولُ لَهُ: " يَا ابْنَ صُورِيَا أَنْشُدُكَ اللهَ وَأُذَكِّرُكَ أَيَّامَهُ عِنْدَ بَنِي إِسْرَائِيلَ، هَلْ تَعْلَمُ أَنَّ اللهَ حَكَمَ فِيمَنْ زَنَى بَعْدَ إِحْصَانِهِ بِالرَّجْمِ فِي التَّوْرَاةِ؟ " فَقَالَ: اللهُمَّ نَعَمْ، أَمَا وَاللهِ يَا أَبَا الْقَاسِمِ إِنَّهُمْ لَيَعْرِفُونَ أَنَّكَ نَبِيُّ مُرْسَلٌ، وَلَكِنَّهُمْ يَحْسِدُونَكَ، فَخَرَجَ رَسُولُ اللهِ ﷺ فَأَمَرَ بِهِمَا فَرُجِمَا عِنْدَ بَابِ مَسْجِدِهِ فِي بَنِي غَنْمِ بْنِ مَالِكِ بْنِ النَّجَّارِ، ثُمَّ كَفَرَ بَعْدَ ذَلِكَ ابْنُ صُورِيَا، فَأَنْزَلَ اللهُ عَزَّ وَجَلَّ: {يَا أَيُّهَا الرَّسُولُ لَا يَحْزُنْكَ الَّذِينَ يُسَارِعُونَ فِي الْكُفْرِ} [المائدة: 41]، إِلَى قَوْلِهِ: {سَمَّاعُونَ لِقَوْمٍ آخَرِينَ لَمْ يَأْتُوكَ} [المائدة: 41] يَعْنِي الَّذِينَ لَمْ يَأْتُوهُ وَبَعَثُوا وَتَخَلَّفُوا وَأَمَرُوهُمْ بِمَا أَمَرُوهُمْ بِهِ مِنْ تَحْرِيفِ الْحُكْمِ عَنْ مَوَاضِعِهِ، قَالَ: {يُحَرِّفُونَ الْكَلِمَ مِنْ بَعْدِ مَوَاضِعِهِ يَقُولُونَ إِنْ أُوتِيتُمْ هَذَا فَخُذُوهُ} [المائدة: 41] لِلتَّجْبِيَةِ {وَإِنْ لَمْ تُؤْتَوْهُ} [المائدة: 41] أَيِ الرَّجْمِ {فَاحْذَرُوا} [المائدة: 41]، إِلَى آخِرِ الْقِصَّةِ 17120 - وَأَخْبَرَنَا أَبُو عَلِيٍّ الرُّوذْبَارِيُّ، أنبأ أَبُو بَكْرِ بْنُ دَاسَةَ، ثنا أَبُو دَاوُدَ، ثنا عَبْدُ الْعَزِيزِ بْنُ يَحْيَى أَبُو الْأَصْبَغِ الْحَرَّانِيُّ، حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ سَلَمَةَ، عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ: سَمِعْتُ رَجُلًا، مِنْ مُزَيْنَةَ يُحَدِّثُ سَعِيدَ بْنَ الْمُسَيِّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: " زَنَى رَجُلٌ وَامْرَأَةٌ مِنَ الْيَهُودِ وَقَدْ أُحْصِنَا حِينَ قَدِمَ رَسُولُ اللهِ ﷺ الْمَدِينَةَ، وَقَدْ كَانَ الرَّجْمُ مَكْتُوبًا عَلَيْهِمْ فِي التَّوْرَاةِ فَتَرَكُوهُ وَأَخَذُوا بِالتَّجْبِيَةِ يُضْرَبُ مِائَةً بِحَبْلٍ مَطْلِيٍّ بِقَارٍ، يُحْمَلُ عَلَى حِمَارٍ وَوَجْهُهُ مِمَّا يَلِي دُبُرَ الْحِمَارِ، فَاجْتَمَعَ أَحْبَارٌ مِنْ أَحْبَارِهِمْ فَبَعَثُوا قَوْمًا آخَرِينَ إِلَى رَسُولِ اللهِ ﷺ فَقَالُوا: سَلُوهُ عَنْ حَدِّ الزَّانِي، قَالَ: وَسَاقَ الْحَدِيثَ قَالَ فِيهِ: قَالَ: وَلَمْ يَكُونُوا مِنْ أَهْلِ دِينِهِ فَيَحْكُمَ بَيْنَهُمْ فَخُيِّرَ فِي ذَلِكَ قَالَ: {فَإِنْ جَاءُوكَ فَاحْكُمْ بَيْنَهُمْ أَوْ أَعْرِضْ عَنْهُمْ}
அபூஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் ((ஸல்)) அவர்கள் மதீனாவிற்கு வந்தபோது, யூத அறிஞர்கள் 'பைத் அல்-மித்ராஸ்' (யூதர்களின் கல்விக்கூடம்) எனும் இடத்தில் ஒன்று திரண்டனர். அவர்களில் திருமணமான ஒரு ஆண், திருமணமான ஒரு யூதப் பெண்ணுடன் விபச்சாரம் செய்திருந்தான். அப்போது அவர்கள் (தங்களுக்குள்), "இந்த ஆணையும் இந்தப் பெண்ணையும் முஹம்மதிடம் அழைத்துச் சென்று, இவர்களுக்கு என்ன தீர்ப்பு என்று கேளுங்கள். அவர்கள் இருவர் மீதான தீர்ப்பு வழங்கும் அதிகாரத்தை அவரிடமே ஒப்படையுங்கள். அவர் உங்களைப் போன்று 'தஜ்பிய்யா' (கீல் பூசப்பட்ட பனைநார் கயிற்றால் கசையடி கொடுத்து, முகத்தில் கரியைப் பூசி, கழுதையின் வால் பகுதியை நோக்கி முகம் இருக்குமாறு அவர்களை இரு கழுதைகள் மீது அமரவைப்பது) எனும் தண்டனையை வழங்கினால், அவரைப் பின்பற்றி அவரை உண்மையாளர் என ஏற்றுக்கொள்ளுங்கள்; ஏனெனில், அவர் (ஒரு நபியல்ல, மாறாக) ஒரு மன்னர் ஆவார். ஆனால், அவர் கல்லெறிந்து கொல்லும் (ரஜ்ம்) தீர்ப்பை வழங்கினால், உங்களிடமுள்ள (அதிகாரத்தை) அவர் பறித்துவிடக்கூடும் என்பதால் எச்சரிக்கையாக இருங்கள்" என்று கூறினார்கள்.

பின்னர் அவர்கள் அல்லாஹ்வின் தூதர் ((ஸல்)) அவர்களிடம் வந்து, "முஹம்மதே! திருமணமான இந்த ஆண் திருமணமான ஒரு பெண்ணுடன் விபச்சாரம் செய்துவிட்டான். எனவே இவர்களுக்கு மத்தியில் தீர்ப்பு வழங்குங்கள், இவர்கள் விஷயத்தில் தீர்ப்பு வழங்கும் அதிகாரத்தை உங்களிடமே ஒப்படைக்கிறோம்" என்றனர். உடனே அல்லாஹ்வின் தூதர் ((ஸல்)) அவர்கள் புறப்பட்டு, 'பைத் அல்-மித்ராஸ்' கல்விக்கூடத்தில் இருந்த யூத அறிஞர்களிடம் வந்து, "யூத சமூகத்தாரே! உங்களில் நன்கு அறிந்த ஒருவரை என்னிடம் வெளியே அனுப்புங்கள்" என்று கேட்டார்கள்.

அப்போது அவர்கள், ஒற்றைக்கண்ணரான அப்துல்லாஹ் இப்னு ஸூரியாவை (நபியவர்களிடம்) அனுப்பினார்கள். (பனூ குறைளா குலத்தவரில் சிலர் அறிவிக்கையில், "அன்றைய தினம் இப்னு ஸூரியாவுடன் அபூயாசிர் இப்னு அஃதப் மற்றும் வஹ்ப் இப்னு யஹூதா ஆகியோரையும் அவர்கள் நபியவர்களிடம் அனுப்பினார்கள்" எனக் கூறியுள்ளனர்). அவர்கள் (நபியவர்களிடம்), "இவர்களே எங்கள் அறிஞர்கள்" என்றனர்.

அவர்களின் விவகாரம் (உண்மையை மறைத்ததால்) குழப்பமடைந்தபோது, அல்லாஹ்வின் தூதர் ((ஸல்)) அவர்கள் அவர்களிடம் பேசினார்கள். முடிவில் அவர்கள் இப்னு ஸூரியாவைச் சுட்டிக்காட்டி, "எஞ்சியிருப்போரில் இவரே தவ்ராத்தை நன்கு அறிந்தவர்" என்று கூறினார்கள். அல்லாஹ்வின் தூதர் ((ஸல்)) அவர்கள் அவரைத் தனியே அழைத்துச் சென்றார்கள். அவர் அவர்களிலேயே வயதில் மிகச் சிறிய இளைஞராக இருந்தார். நபியவர்கள் அவரிடம் (உண்மையைக் கூறுமாறு) வலியுறுத்திக் கேட்டார்கள்: "இப்னு ஸூரியாவே! இஸ்ரவேலர்களுக்கு அல்லாஹ் வழங்கிய அருட்கொடைகளை நினைவூட்டி, அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு உன்னிடம் கேட்கிறேன்; திருமணமானவர் விபச்சாரம் செய்தால், அவருக்குக் கல்லெறிந்து கொல்லும் (ரஜ்ம்) தண்டனையைத்தான் அல்லாஹ் தவ்ராத்தில் விதியாக்கியுள்ளான் என்பதை நீ அறிவாயா?" என்று கேட்டார்கள். அதற்கு அவர், "யா அல்லாஹ்! ஆம். அல்லாஹ்வின் மீது ஆணையாக! அபுல் காஸிமே! தாங்கள் இறைவனால் அனுப்பப்பட்ட நபி என்பதை அவர்கள் (யூதர்கள்) திட்டவட்டமாக அறிவார்கள். ஆனால் அவர்கள் உங்கள் மீது பொறாமை கொள்கிறார்கள்" என்று கூறினார்.

பின்னர் அல்லாஹ்வின் தூதர் ((ஸல்)) அவர்கள் வெளியே வந்து, அந்த இருவருக்கும் (கல்லெறியும்படி) உத்தரவிட்டார்கள். அதன்படி, பனூ ஃகன்ம் இப்னு மாலிக் இப்னு நஜ்ஜார் பகுதியில் அமைந்திருந்த நபியவர்களின் பள்ளிவாசல் வாசலில் வைத்து அவர்கள் இருவரும் கல்லெறிந்து கொல்லப்பட்டனர். பின்னர் அதன்பிறகு இப்னு ஸூரியா (மீண்டும்) நிராகரித்து விட்டார். அப்போது கண்ணியமும் மாண்பும் மிக்க அல்லாஹ் பின்வரும் வசனத்தை அருளினான்:

{யா அய்யுஹர்-ரஸூலு லா யஹ்ஸுன்கல்லதீன யுஸாரிஊன ஃபில்-குஃப்ரி...}
(நபியே! இறைமறுப்பில் விரைந்து செல்வோர் குறித்து நீர் கவலைப்பட வேண்டாம்...) [அல்-மாயிதா 5:41].
தொடர்ந்து,
{ஸம்மாஊன லிகவ்மின் ஆகரீன லம் யஃதூக்க}
(...உம்மிடம் வராத மற்றொரு சாராருக்காக அவர்கள் செவிமடுக்கின்றனர்) [அல்-மாயிதா 5:41]
என்ற வசனம் வரை அருளினான். அதாவது, அவர்கள் நபியவர்களிடம் வராமல் மற்றவர்களை அனுப்பிவிட்டுப் பின்தங்கிக் கொண்டனர். அல்லாஹ்வின் தீர்ப்பை அதன் இடத்திலிருந்து மாற்றுமாறு அவர்கள் அவர்களுக்குக் கட்டளையிட்டனர்.

மேலும் அல்லாஹ் கூறுகிறான்:
{யுஹர்ரிஃபூனல்-கலிம மின் பஃதி மவாளிஇஹி யகூலூன இன் ஊதீதும் ஹாதா ஃபகுதூஹு}
(அவர்கள் வார்த்தைகளை அவற்றுக்குரிய இடங்களிலிருந்து மாற்றுகின்றனர். "இந்தத் தீர்ப்பு உங்களுக்கு வழங்கப்பட்டால் அதனைப் பெற்றுக் கொள்ளுங்கள்...) [அல்-மாயிதா 5:41]. இது தஜ்பிய்யா (எனும் தண்டனையைக்) குறிக்கிறது.
{...வஇன் லம் துஃதவ்ஹu...}
(...இது உங்களுக்கு வழங்கப்படாவிட்டால்...) அதாவது, ரஜ்ம் (எனும் தண்டனை வழங்கப்பட்டால்),
{...ஃபஹ்தரூ}
(...எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள்!" என்றும் அவர்கள் கூறுகின்றனர்) [அல்-மாயிதா 5:41] என்று அந்தச் சம்பவம் முழுவதும் முடிவடையும் வரை விவரிக்கப்பட்டுள்ளது.

(இதன் மற்றொரு அறிவிப்பில்) அபூஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் ((ஸல்)) அவர்கள் மதீனாவிற்கு வந்திருந்த நேரத்தில், யூதர்களைச் சேர்ந்த திருமணமான ஒரு ஆணும் பெண்ணும் விபச்சாரம் செய்தனர். அவர்களுக்குத் தவ்ராத்தில் கல்லெறிந்து கொல்லும் (ரஜ்ம்) தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால், அவர்கள் அதனைக் கைவிட்டுவிட்டு 'தஜ்பிய்யா' என்ற தண்டனையைக் கையாண்டனர். அதாவது, கீல் பூசப்பட்ட கயிற்றால் நூறு கசையடிகள் கொடுத்து, கழுதையின் வால் பகுதியை நோக்கி முகம் இருக்குமாறு கழுதையின் மீது அமரவைப்பது ஆகும். அப்போது அவர்களின் அறிஞர்கள் ஒன்றுகூடி, மற்றொரு கூட்டத்தினரை அல்லாஹ்வின் தூதர் ((ஸல்)) அவர்களிடம் அனுப்பி, "விபச்சாரம் செய்தவருக்கான தண்டனை என்னவென்று அவரிடம் கேளுங்கள்" என்றனர்.

அறிவிப்பாளர் இந்த ஹதீஸை முழுமையாக அறிவிக்கிறார். அதில் பின்வருமாறு இடம்பெற்றுள்ளது: அவர்கள் நபியவர்களின் மார்க்கத்தைப் பின்பற்றுபவர்களாக இல்லாததால், அவர்களுக்கு மத்தியில் தீர்ப்பு வழங்குவதிலும் அல்லது புறக்கணிப்பதிலும் நபியவர்களுக்கு உரிமை அளிக்கப்பட்டது. அப்போது அல்லாஹ் அருளினான்:
{ஃபஇன் ஜாஊக்க ஃபஹ்கும் பைனஹும் அவ் அஃரிள் அன்ஹும்}
(அவர்கள் உம்மிடம் வந்தால் அவர்களுக்கு மத்தியில் தீர்ப்பு வழங்குவீராக; அல்லது அவர்களைப் புறக்கணித்து விடுவீராக).
ஹதீஸ் தரம் : ஹதீஸ் தரம் கிடைக்கவில்லை
لا نعرف حكم له
أَخْبَرَنَا أَبُو الْحَسَنِ عَلِيُّ بْنُ أَحْمَدَ بْنِ عَبْدَانَ , أنبأ أَحْمَدُ بْنُ عُبَيْدٍ الصَّفَّارُ , ثنا ابْنُ مِلْحَانَ , ثنا يَحْيَى بْنُ بُكَيْرٍ , ثنا اللَّيْثُ , عَنْ عُقَيْلٍ , عَنِ ابْنِ شِهَابٍ , أَنَّهُ سَمِعَ رَجُلًا , مِنْ مُزَيْنَةَ مِمَّنْ يَتْبَعُ الْعِلْمَ وَيَعِيهِ , يُحَدِّثُ عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيِّبِ أَنَّ أَبَا هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: بَيْنَمَا نَحْنُ جُلُوسٌ عِنْدَ رَسُولِ اللهِ ﷺ , فَذَكَرَ الْحَدِيثَ فِي الْيَهُودِيِّ الَّذِي زَنَى بَعْدَمَا أُحْصِنَ , قَالَ: فَانْطَلَقَ - يَعْنِي النَّبِيَّ ﷺ يَؤُمُّ بَيْتَ الْمِدْرَاسِ , فَقَالَ لَهُمْ: " يَا مَعْشَرَ الْيَهُودِ , أَنْشُدُكُمْ بِاللهِ الَّذِي أَنْزَلَ التَّوْرَاةَ عَلَى مُوسَى , مَا تَجِدُونَ فِي التَّوْرَاةِ مِنَ الْعُقُوبَةِ عَلَى مَنْ زَنَى وَقَدْ أُحْصِنَ؟ "
அபூஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அருகில் அமர்ந்திருந்தபோது, (திருமணமான) பாதுகாக்கப்பட்ட நிலையில் (முஹ்ஸன்) விபச்சாரம் செய்த ஒரு யூதரைப் பற்றிய செய்தியைக் குறிப்பிட்டார்கள். பின்னர், நபி (ஸல்) அவர்கள் (யூதர்களின்) வேதக் கல்விக் கூடத்தை (பைத்துல் மித்ராஸை) நோக்கிச் சென்றார்கள்.

அங்கு அவர்களிடம், "யூத சமூகத்தாரே! மூஸா (அலை) அவர்கள் மீது தவ்ராத்தை அருளிய அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு உங்களைக் கேட்கிறேன்; திருமணமான ஒருவர் (முஹ்ஸன்) விபச்சாரம் செய்தால், அவருக்கு தவ்ராத்தில் நீங்கள் என்ன தண்டனையைக் காண்கிறீர்கள்?" என்று கேட்டார்கள்.
ஹதீஸ் தரம் : ஹதீஸ் தரம் கிடைக்கவில்லை
لا نعرف حكم له