حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، رضى الله عنه أَنَّهُ كَانَ يَقُولُ شَرُّ الطَّعَامِ طَعَامُ الْوَلِيمَةِ يُدْعَى لَهَا الأَغْنِيَاءُ، وَيُتْرَكُ الْفُقَرَاءُ، وَمَنْ تَرَكَ الدَّعْوَةَ فَقَدْ عَصَى اللَّهَ وَرَسُولَهُ صلى الله عليه وسلم.
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் கூறினார்கள்:
உணவுகளில் மிக மோசமானது, செல்வந்தர்கள் (மட்டும்) அழைக்கப்பட்டு ஏழைகள் புறக்கணிக்கப்படும் வலீமா (திருமண விருந்து) உணவாகும். மேலும், யார் (திருமண) அழைப்பை ஏற்க மறுக்கிறாரோ, அவர் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதர் (ஸல்) அவர்களுக்கும் மாறுசெய்தவர் ஆவார்.
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் கூறிவந்தார்கள்: 'செல்வந்தர்கள் அழைக்கப்பட்டு, ஏழைகள் புறக்கணிக்கப்படும் திருமண விருந்தே உணவுகளில் மிக மோசமானதாகும். யார் (சரியான முறையில் விடுக்கப்பட்ட) அழைப்பை ஏற்கவில்லையோ, அவர் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதர் (ஸல்) அவர்களுக்கும் மாறு செய்துவிட்டார்.'