முஆவியா பின் அல்-ஹகம் அஸ்-ஸுலமீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
(இந்த ஹதீஸ் இதற்கு முந்தைய ஹதீஸின் கருத்தை ஒத்ததாகும். எனினும், இதில் பின்வரும் செய்தி கூடுதலாக இடம்பெற்றுள்ளது:)
நான் (நபி (ஸல்) அவர்களிடம்), "எங்களில் சிலர் (குறி சொல்லும் விதமாக மணலில்) கோடுகள் வரைகின்றனரே?" என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "நபிமார்களில் ஒரு நபி கோடுகள் வரைபவராக இருந்தார். எனவே, யாருடைய கோடுகள் (அந்த நபியின் கோட்டுடன்) ஒத்துப்போகின்றதோ அது (சரியானதே)" என்று கூறினார்கள்.