அபூசயீத் அல்குத்ரீ (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"வானத்தின் அடிவானத்தில் (உள்ள) ஒளிரும் பிரகாசமான நட்சத்திரத்தை நீங்கள் (பூமியிலிருந்து) பார்ப்பதைப் போன்று, சொர்க்கவாசிகள் (தங்களுக்கு மேலே) 'இல்லிய்யீன்' எனும் (உயர்ந்த அந்தஸ்தில் உள்ள) வாசிகளைப் பார்ப்பார்கள். நிச்சயமாக அபூபக்கரும் உமரும் அவர்களில் (அத்தகைய உயர்ந்த அந்தஸ்து பெற்றவர்களில்) அடங்குவர். அவர்கள் இருவரும் (அவ்வந்தஸ்திற்குத் தகுதியானவர்கள்; மேலும் அவர்கள்) எத்துணைச் சிறந்தவர்கள்!"
(இந்த ஹதீஸை அறிவிக்கும்) முஜாலித் என்பவருடன் விரிப்பின் மீது அமர்ந்திருந்த இஸ்மாயீல் பின் அபீ காலித் அவர்கள் கூறினார்கள்: "அபூசயீத் அல்குத்ரீ (ரழி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடமிருந்து இதனைக் கேட்டதாக அதிய்யா அல்-அவ்ஃபீ சாட்சியளித்ததற்கு (அதாவது அறிவித்ததற்கு) நான் சாட்சியளிக்கிறேன்."
ஹதீஸ் தரம் : ஸஹீஹ் லி கைரிஹி (பிற சான்றுகளின் துணையுடன் ஆதாரப்பூர்வமானது)