நான் சந்தையில் இப்னு உமர் (ரழி) அவர்களைப் பார்த்தேன். அவர்கள் ஷாம் தேசத்து ஆடை ஒன்றை வாங்கினார்கள். (அதில் பட்டு கலந்திருக்கலாம் என்ற அச்சத்தில்) அதில் சிவப்பு நிற நூல் இருப்பதைப் பார்த்ததும் அதைத் திருப்பிக் கொடுத்துவிட்டார்கள். நான் அஸ்மா பின்த் அபூபக்ர் (ரழி) அவர்களிடம் வந்து இந்த விவரத்தைக் கூறினேன்.
அப்போது அவர்கள், "பெண்ணே! (பணிப்பெண்ணே!) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் ஜுப்பாவை (அங்கியை) என்னிடம் எடுத்து வா" என்று கூறினார்கள். உடனே, கழுத்துப்பட்டை, இரு கைகள் மற்றும் (முன், பின்) திறப்புகள் ஆகியவை 'தீபாஜ்' (தடிமனான பட்டு) துணியால் விளிம்பிடப்பட்டிருந்த (பாரசீக பாணியிலான) 'தயாலிஸா' வகையைச் சேர்ந்த ஜுப்பா ஒன்றை அவர்கள் (எடுத்துக் காட்டினார்கள்).