இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

5495ஸஹீஹ் முஸ்லிம்
حَدَّثَنَا أَبُو كَامِلٍ، فُضَيْلُ بْنُ حُسَيْنٍ الْجَحْدَرِيُّ حَدَّثَنَا بِشْرٌ، - يَعْنِي ابْنَ مُفَضَّلٍ
- حَدَّثَنَا سُهَيْلٌ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ ‏ لاَ
تَصْحَبُ الْمَلاَئِكَةُ رُفْقَةً فِيهَا كَلْبٌ وَلاَ جَرَسٌ ‏ ‏ ‏.‏
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
"நாயோ மணியோ உள்ள பயணக் குழுவினருடன் வானவர்கள் (அருள்வளம் புரியும் மலக்குகள்) துணை செல்வதில்லை" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح