இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

773முஸ்னது அஹ்மத்
حَدَّثَنَا حَجَّاجٌ وَأَبُو نُعَيْمٍ قَالا حَدَّثَنَا فِطْرٌ عَنِ الْقَاسِمِ بْنِ أَبِي بَزَّةَ عَنْ أَبِي الطُّفَيْلِ قَالَ حَجَّاجٌ سَمِعْتُ عَلِيًّا يَقُولُ قَالَ رَسُولُ اللهِ ﷺ لَوْ لَمْ يَبْقَ مِنَ الدُّنْيَا إِلا يَوْمٌ لَبَعَثَ اللهُ عَزَّ وَجَلَّ رَجُلًا مِنَّا يَمْلَؤُهَا عَدْلًا كَمَا مُلِئَتْ جَوْرًا قَالَ أَبُو نُعَيْمٍ رَجُلًا مِنِّي قَالَ وَسَمِعْتُهُ مَرَّةً يَذْكُرُهُ عَنْ حَبِيبٍ عَنْ أَبِي الطُّفَيْلِ عَنْ عَلِيٍّ عَنِ النَّبِيِّ ﷺ
அலீ (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

“இவ்வுலகின் (ஆயுளில்) ஒரேயொரு நாள் மட்டுமே மீதமிருந்தாலும், வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் எங்களில் (அஹ்லுல் பைத்துகளில்) இருந்து ஒருவரை அனுப்பி, உலகம் எவ்வாறு அநீதியால் நிரம்பியிருந்ததோ அதேபோன்று அதனை நீதியால் நிரப்பச் செய்வான்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) அபு நுஅய்ம் அவர்கள் கூறும்போது, (“எங்களில் இருந்து ஒருவரை” என்பதற்குப் பதிலாக) “என்னில் இருந்து ஒருவரை” என்று குறிப்பிட்டார். மேலும் அவர், “ஒருமுறை அவர் இதனை ஹபீப், அபுத்துஃபைல் மற்றும் அலீ (ரழி) ஆகியோர் வழியாக நபி (ஸல்) அவர்களிடமிருந்து அறிவித்ததை நான் செவியுற்றேன்” என்றும் கூறினார்.
ஹதீஸ் தரம் : இஸ்னாதுஹு ளயீஃப் (இதன் அறிவிப்பாளர் தொடர் பலவீனமானது)
إسناده ضعيف