அபூ ஸயீத் அல்-குத்ரீ (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: முஸ்லிம்களிடையே பிளவு ஏற்படும்போது, ஒரு பிரிவினர் (மார்க்கத்தை விட்டு) வெளியேறுவார்கள். அவ்விரு குழுக்களில், சத்தியத்திற்கு மிகவும் நெருக்கமான குழுவினர் அவர்களைக் கொல்வார்கள்.
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا عَبْدُ الأَعْلَى، حَدَّثَنَا دَاوُدُ، عَنْ أَبِي نَضْرَةَ، عَنْ أَبِي، سَعِيدٍ الْخُدْرِيِّ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ تَمْرُقُ مَارِقَةٌ فِي فُرْقَةٍ مِنَ النَّاسِ فَيَلِي قَتْلَهُمْ أَوْلَى الطَّائِفَتَيْنِ بِالْحَقِّ .
அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மக்களிடையே பிளவு ஏற்படும்போது, ஒரு கூட்டத்தினர் (மார்க்கத்திலிருந்து அம்பு வேட்டையாடப்பட்ட பிராணியை துளைத்துக்கொண்டு வெளியேறுவது போல) விலகிச் செல்வார்கள். அவர்களை, (அப்போதுள்ள) இரு கூட்டத்தினரில் சத்தியத்திற்கு மிக நெருக்கமான கூட்டத்தினர் கொல்வார்கள்.