இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

77அன்-நவவியின் 40 ஹதீஸ்கள்
وَعَنْ عَبْدِ اَللَّهِ بْنِ أَبِي بَكْرٍ رَحِمَهُ اَللَّهُ; { أَنَّ فِي اَلْكِتَابِ اَلَّذِي كَتَبَهُ رَسُولُ اَللَّهِ ‏- صلى الله عليه وسلم ‏-لِعَمْرِو بْنِ حَزْمٍ: أَنْ لَا يَمَسَّ اَلْقُرْآنَ إِلَّا طَاهِرٌ } رَوَاهُ مَالِكٌ مُرْسَلاً, وَوَصَلَهُ النَّسَائِيُّ, وَابْنُ حِبَّانَ, وَهُوَ مَعْلُولٌ.‏
அப்துல்லாஹ் இப்னு அபூபக்ர் (ரஹி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: (நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்) அம்ர் இப்னு ஹஸ்ம் (ரழி) அவர்களுக்கு எழுதிய கடிதத்தில், “தூய்மையானவரைத் தவிர வேறு யாரும் குர்ஆனைத் தொடக் கூடாது” என்று இடம் பெற்றிருந்தது.
இதை மாலிக் அவர்கள் முர்ஸலாகவும் அறிவித்துள்ளனர். நஸாயீ மற்றும் இப்னு ஹிப்பான் ஆகியோர் இதன் சங்கிலித்தொடரை இணைத்து (மவ்ஸூலாக) அறிவித்துள்ளனர். எனினும், இது மஃலூல் (குறையுடையது) ஆகும்.