இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

578 aஸஹீஹ் முஸ்லிம்
حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، قَالَ قَرَأْتُ عَلَى مَالِكٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ يَزِيدَ، مَوْلَى الأَسْوَدِ بْنِ سُفْيَانَ عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، أَنَّ أَبَا هُرَيْرَةَ، قَرَأَ لَهُمْ ‏{‏ إِذَا السَّمَاءُ انْشَقَّتْ‏}‏ فَسَجَدَ فِيهَا فَلَمَّا انْصَرَفَ أَخْبَرَهُمْ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم سَجَدَ فِيهَا ‏.‏
அபூ ஹுரைரா (ரலி) அவர்கள், அவர்களுக்கு "இதாஸ் ஸமாஉன் ஷக்கத்" (வானம் பிளக்கும் போது) எனும் அத்தியாயத்தை ஓதி, அதில் ஸஜ்தா செய்தார்கள். அவர் (ஓதி முடித்து) திரும்பியபோது, "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இதில் ஸஜ்தா செய்தார்கள்" என்று அவர்களுக்குத் தெரிவித்தார்கள்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
578 dஸஹீஹ் முஸ்லிம்
وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رُمْحٍ، أَخْبَرَنَا اللَّيْثُ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ، عَنْ صَفْوَانَ بْنِ سُلَيْمٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ الأَعْرَجِ، مَوْلَى بَنِي مَخْزُومٍ عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّهُ قَالَ سَجَدَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِي ‏{‏ إِذَا السَّمَاءُ انْشَقَّتْ‏}‏ وَ ‏{‏ اقْرَأْ بِاسْمِ رَبِّكَ‏}‏
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “இதாஸ் ஸமாவுன் ஷக்கத்” மற்றும் “இக்ரஉ பிஸ்மி ரப்பிக” (ஆகிய அத்தியாயங்களை ஓதும் போது ஓதுதல் ஸஜ்தா) செய்தார்கள்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
961சுனனுந் நஸாயீ
أَخْبَرَنَا قُتَيْبَةُ، عَنْ مَالِكٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ يَزِيدَ، عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، أَنَّ أَبَا هُرَيْرَةَ، قَرَأَ بِهِمْ ‏{‏ إِذَا السَّمَاءُ انْشَقَّتْ ‏}‏ فَسَجَدَ فِيهَا فَلَمَّا انْصَرَفَ أَخْبَرَهُمْ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم سَجَدَ فِيهَا ‏.‏
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் (மக்களுக்கு இமாமாக நின்று) “இதாஸ் ஸமாஉ இன்ஷக்கத்” (என்ற அத்தியாயத்தை) ஓதி, அதில் ஸஜ்தாச் செய்தார்கள். அவர்கள் (தொழுகையை) முடித்ததும், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதில் ஸஜ்தாச் செய்தார்கள்” என்று அவர்களிடம் கூறினார்கள்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (தாருஸ்ஸலாம் பதிப்பு)