இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

5013ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي صَعْصَعَةَ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، أَنَّ رَجُلاً، سَمِعَ رَجُلاً، يَقْرَأُ ‏{‏قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ‏}‏ يُرَدِّدُهَا فَلَمَّا أَصْبَحَ جَاءَ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَذَكَرَ ذَلِكَ لَهُ وَكَأَنَّ الرَّجُلَ يَتَقَالُّهَا فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ ‏ وَالَّذِي نَفْسِي بِيَدِهِ إِنَّهَا لَتَعْدِلُ ثُلُثَ الْقُرْآنِ ‏ ‏‏.‏
அபூ சயீத் அல்-குத்ரீ (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:

ஒரு மனிதர் மற்றொரு மனிதர் (சூரத்துல் இஃக்லாஸ்) '(நபியே!) நீர் கூறுவீராக: அவன் அல்லாஹ் ஒருவனே.' (112. 1) என்பதை திரும்பத் திரும்ப ஓதுவதைக் கேட்டார்கள்.

அடுத்த நாள் காலையில் அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, அதை ஓதுவது போதுமானதல்ல என்று அவர் கருதியது போல அதுபற்றி அவர்களிடம் தெரிவித்தார்கள்.

அதன்பேரில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், "எவனது கைவசம் என் உயிர் இருக்கிறதோ அவன் மீது சத்தியமாக, இந்த சூரா குர்ஆனின் மூன்றில் ஒரு பங்கிற்கு சமமானது!"

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
6643ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي سَعِيدٍ، أَنَّ رَجُلاً، سَمِعَ رَجُلاً، يَقْرَأُ ‏{‏قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ‏}‏ يُرَدِّدُهَا، فَلَمَّا أَصْبَحَ جَاءَ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَذَكَرَ ذَلِكَ لَهُ، وَكَأَنَّ الرَّجُلَ يَتَقَالُّهَا فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ ‏ وَالَّذِي نَفْسِي بِيَدِهِ إِنَّهَا لَتَعْدِلُ ثُلُثَ الْقُرْآنِ ‏ ‏‏.‏
அபூ சயீத் அல்-குத்ரீ (ரழி) அறிவித்தார்கள்:

ஒரு மனிதர் இன்னொரு மனிதர் சூரா அல்-இக்லாஸ் (ஏகத்துவம்) 'கூறுவீராக: அவன் அல்லாஹ், ஒருவன் (112) ஓதுவதைக் கேட்டார்; மேலும் அவர் அதைத் திரும்பத் திரும்ப ஓதிக் கொண்டிருந்தார். மறுநாள் காலையில் அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, அந்த சூராவை ஓதுவது போதுமானதல்ல என்று அவர் கருதியது போல, அந்த முழு நிகழ்வையும் அவர்களிடம் குறிப்பிட்டார். அதன்பேரில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள், "என் உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அவன் மீது சத்தியமாக! அது (சூரா எண் 112) குர்ஆனின் மூன்றில் ஒரு பங்கிற்குச் சமம்."

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
7374ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا إِسْمَاعِيلُ، حَدَّثَنِي مَالِكٌ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي صَعْصَعَةَ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، أَنَّ رَجُلاً، سَمِعَ رَجُلاً، يَقْرَأُ ‏{‏قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ‏}‏ يُرَدِّدُهَا، فَلَمَّا أَصْبَحَ جَاءَ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَذَكَرَ لَهُ ذَلِكَ، وَكَأَنَّ الرَّجُلَ يَتَقَالُّهَا فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ ‏ وَالَّذِي نَفْسِي بِيَدِهِ إِنَّهَا لَتَعْدِلُ ثُلُثَ الْقُرْآنِ ‏ ‏‏.‏ زَادَ إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ عَنْ مَالِكٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي سَعِيدٍ، أَخْبَرَنِي أَخِي، قَتَادَةُ بْنُ النُّعْمَانِ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم‏.‏
அபூ சயீத் அல்-குத்ரீ (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
ஒருவர், மற்றொருவர் (தொழுகையில்) '(நபியே!) நீர் கூறுவீராக: "அல்லாஹ் அவன் ஒருவன்."' (112:1) என்று ஓதுவதைக் கேட்டார். அவர் அதைத் திரும்பத் திரும்ப ஓதினார். காலை நேரமானபோது, (அதனைக் கேட்ட) அவர் நபி (ஸல்) அவர்களிடம் சென்று, அந்த சூராவை மட்டும் ஓதுவது போதாது என்று அவர் கருதியதைப் போன்று அதுபற்றி அவர்களிடம் தெரிவித்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், "என் உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அவன்மீது சத்தியமாக, அது குர்ஆனின் மூன்றில் ஒரு பகுதிக்குச் சமம்."

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
995சுனனுந் நஸாயீ
أَخْبَرَنَا قُتَيْبَةُ، عَنْ مَالِكٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي صَعْصَعَةَ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، أَنَّ رَجُلاً، سَمِعَ رَجُلاً، يَقْرَأُ ‏{‏ قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ ‏}‏ يُرَدِّدُهَا فَلَمَّا أَصْبَحَ جَاءَ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَذَكَرَ ذَلِكَ لَهُ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ ‏ وَالَّذِي نَفْسِي بِيَدِهِ إِنَّهَا لَتَعْدِلُ ثُلُثَ الْقُرْآنِ ‏ ‏ ‏.‏
அபூ ஸயீத் அல் குத்ரீ (ரழி) அவர்கள் அறிவித்ததாவது:

ஒருவர், இன்னொருவர் "கூறுவீராக: அவன் அல்லாஹ், ஒருவன்" என்று திரும்பத் திரும்ப ஓதிக் கொண்டிருப்பதை கேட்டார். காலை நேரமானபோது, அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று, அதுபற்றி அவர்களிடம் கூறினார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "என் உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அவன் மீது சத்தியமாக, அது குர்ஆனின் மூன்றில் ஒரு பகுதிக்கு சமமானதாகும்."

ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (தாருஸ்ஸலாம் பதிப்பு)