அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"எவரேனும் ஒவ்வொரு தொழுகைக்குப் பிறகும் முப்பத்து மூன்று தடவைகள் சுப்ஹானல்லாஹ் (அல்லாஹ் தூயவன்) என்றும், முப்பத்து மூன்று தடவைகள் அல்ஹம்துலில்லாஹ் (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்றும், முப்பத்து மூன்று தடவைகள் அல்லாஹு அக்பர் (அல்லாஹ் மிகப்பெரியவன்) என்றும் ஆக மொத்தம் தொண்ணூற்று ஒன்பது தடவைகள் கூறி, பின்னர் நூறைப் பூர்த்தி செய்ய, "அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை, அவனுக்கு யாதொரு இணையுமில்லை, அவனுக்கே ஆட்சியனைத்தும் உரியது, அவனுக்கே புகழனைத்தும் உரியது, மேலும் அவன் அனைத்துப் பொருட்களின் மீதும் பேராற்றலுடையவன்," என்று கூறினால், அவருடைய பாவங்கள் கடலின் நுரை போன்று மிக அதிகமாக இருந்தாலும் மன்னிக்கப்படும்."