அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘அஸ்ர்’ தொழுகைக்குப் பிறகு சூரியன் மறையும் வரையிலும், ‘சுப்ஹ்’ தொழுகைக்குப் பிறகு சூரியன் உதயமாகும் வரையிலும் (நஃபிலான) தொழுகைகளைத் தொழுவதைத் தடுத்தார்கள்.
أَخْبَرَنَا قُتَيْبَةُ، عَنْ مَالِكٍ، عَنْ مُحَمَّدِ بْنِ يَحْيَى بْنِ حِبَّانَ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم نَهَى عَنِ الصَّلاَةِ بَعْدَ الْعَصْرِ حَتَّى تَغْرُبَ الشَّمْسُ وَعَنِ الصَّلاَةِ بَعْدَ الصُّبْحِ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ .
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: நபி (ஸல்) அவர்கள் அஸ்ருக்குப் பிறகு சூரியன் மறையும் வரையிலும், சுப்ஹுக்குப் பிறகு சூரியன் உதயமாகும் வரையிலும் (நஃபிலான) தொழுகைகளைத் தடை செய்தார்கள்.