அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"ஸவ்முல் விஸால் (தொடர் நோன்பு) நோற்பதைத் தவிர்த்துக்கொள்ளுங்கள்."
அவர்கள் (நபித்தோழர்கள்) கூறினார்கள்: "அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் ஸவ்முல் விஸால் நோற்கின்றீர்களே?"
அதற்கு அவர்கள் கூறினார்கள்: "அந்த விஷயத்தில் நீங்கள் என்னைப் போன்றவர்கள் அல்லர். ஏனெனில், என் இறைவன் எனக்கு உணவளித்து, எனக்கு அருந்தக் கொடுக்கும் நிலையில் நான் என் இரவைக் கழிக்கிறேன். ஆகவே, உங்களால் தாங்கிக் கொள்ளக்கூடிய செயல்களையே நீங்கள் மேற்கொள்ளுங்கள்."