حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَنَّ رِجَالاً، مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم أُرُوا لَيْلَةَ الْقَدْرِ فِي الْمَنَامِ فِي السَّبْعِ الأَوَاخِرِ، فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَرَى رُؤْيَاكُمْ قَدْ تَوَاطَأَتْ فِي السَّبْعِ الأَوَاخِرِ، فَمَنْ كَانَ مُتَحَرِّيَهَا فَلْيَتَحَرَّهَا فِي السَّبْعِ الأَوَاخِرِ .
இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்களின் தோழர்களில் சிலர், (ரமளான் மாதத்தின்) கடைசி ஏழு இரவுகளில் லைலத்துல் கத்ர் (வருவதாக) கனவில் காட்டப்பட்டார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "உங்கள் கனவுகள் (லைலத்துல் கத்ர்) கடைசி ஏழு இரவுகளில் (வருவதாக) ஒத்திருப்பதாய் நான் காண்கிறேன். எனவே, யார் அதைத் தேட விரும்புகிறாரோ, அவர் அதை (ரமளான் மாதத்தின்) கடைசி ஏழு இரவுகளில் தேடட்டும்."
وَحَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، قَالَ قَرَأْتُ عَلَى مَالِكٍ عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، - رضى الله عنهما - أَنَّ رِجَالاً، مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم أُرُوا لَيْلَةَ الْقَدْرِ فِي الْمَنَامِ فِي السَّبْعِ الأَوَاخِرِ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَرَى رُؤْيَاكُمْ قَدْ تَوَاطَأَتْ فِي السَّبْعِ الأَوَاخِرِ فَمَنْ كَانَ مُتَحَرِّيَهَا فَلْيَتَحَرَّهَا فِي السَّبْعِ الأَوَاخِرِ .
இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: நபி (ஸல்) அவர்களின் தோழர்களில் சிலருக்கு (ரமழானின்) கடைசி ஏழு இரவுகளில் கனவில் லைலத்துல் கத்ர் காட்டப்பட்டது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "கடைசி ஏழு இரவுகளில் உங்கள் கனவுகள் ஒத்திருப்பதை நான் காண்கிறேன். எனவே, அதைத் தேட விரும்புபவர் அதை கடைசி ஏழு இரவுகளில் தேடட்டும்" என்று கூறினார்கள்.