இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

2295ஸஹீஹ் முஸ்லிம்
حَدَّثَنِي أَحْمَدُ بْنُ يُوسُفَ الأَزْدِيُّ، حَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصِ بْنِ غِيَاثٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا الأَعْمَشُ، حَدَّثَنِي شَقِيقٌ، عَنْ عَمْرِو بْنِ الْحَارِثِ، عَنْ زَيْنَبَ، امْرَأَةِ عَبْدِ اللَّهِ ‏.‏ قَالَ فَذَكَرْتُ لإِبْرَاهِيمَ فَحَدَّثَنِي عَنْ أَبِي عَبَيْدَةَ عَنْ عَمْرِو بْنِ الْحَارِثِ عَنْ زَيْنَبَ امْرَأَةِ عَبْدِ اللَّهِ ‏.‏ بِمِثْلِهِ سَوَاءً قَالَ قَالَتْ كُنْتُ فِي الْمَسْجِدِ فَرَآنِي النَّبِيُّ صلى الله عليه وسلم فَقَالَ ‏ ‏ تَصَدَّقْنَ وَلَوْ مِنْ حُلِيِّكُنَّ ‏ ‏ ‏.‏ وَسَاقَ الْحَدِيثَ بِنَحْوِ حَدِيثِ أَبِي الأَحْوَصِ ‏.‏
அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்களின் மனைவி ஸைனப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் பள்ளிவாசலில் இருந்தேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் என்னைப் பார்த்து, "(பெண்களே!) உங்களின் நகைகளிலிருந்தேனும் தர்மம் செய்யுங்கள்" என்று கூறினார்கள். (இந்த ஹதீஸின் மற்ற விவரங்கள் அபூஅஹ்வஸ் (ரஹ்) அவர்களின் ஹதீஸில் உள்ளதைப் போன்றே அமைந்துள்ளன).
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح