இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "இந்தச் சமுதாயத்தில் சிறந்த தலைமுறையினர், நான் எந்தத் தலைமுறையினரிடையே அனுப்பப்பட்டேனோ அவர்கள் ஆவர். பிறகு அவர்களைத் தொடர்ந்து வருபவர்கள் ஆவர்."
(அறிவிப்பாளர்களில் ஒருவரான) அபூஅவானா (ரஹ்) அவர்களின் அறிவிப்பில் கூடுதலாக இடம்பெற்றுள்ளது: "(நபி (ஸல்) அவர்கள்) மூன்றாவது (தலைமுறையைக்) குறிப்பிட்டர்களா, இல்லையா என்பதை அல்லாஹ்வே நன்கறிவான்." (இந்த அறிவிப்பு) ஸஹ்தம் (ரஹ்) அவர்கள் இம்ரான் (ரலி) அவர்களிடமிருந்து அறிவித்த ஹதீஸைப் போன்றே அமைந்துள்ளது.
மேலும், ஹிஷாம் (ரஹ்) அவர்கள் கத்தாதா (ரஹ்) அவர்களிடமிருந்து அறிவித்த ஹதீஸில் கூடுதலாக இடம்பெற்றுள்ளது: "அவர்கள் சத்தியம் செய்யும்படி கேட்கப்படாமலேயே சத்தியம் செய்வார்கள்."