இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

858ரியாதுஸ் ஸாலிஹீன்
وعن أبي أمامة صُدي بن عجلان الباهلي رضي الله عنه قال‏:‏ قال رسول الله صلى الله عليه وسلم‏:‏ “إن أولى الناس بالله من بدأهم بالسلام‏"‏ ‏(‏‏(‏رواه أبو داود بإسناد جيد‏)‏‏)‏‏.‏
ورواه الترمذي عن أبي أمامة رضي الله عنه‏:‏ قيل‏:‏ يا رسول الله، الرجلان يلتقيان، أيهما يبدأ بالسلام‏؟‏ قال‏:‏ ‏"‏أولاهما بالله تعالى‏"‏ قال الترمذي ‏:‏ حديث حسن‏.‏
அபூ உமாமா சுதைய் இப்னு அஜ்லான் அல்பாஹிலீ (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “மக்களில் அல்லாஹ்விடம் மிகவும் நெருக்கமானவர் (யாரெனில்), அவர்களுக்கு முதலில் ஸலாம் கூறுபவரே ஆவார்.”
(நூல்: அபூதாவூத், சிறந்த அறிவிப்பாளர் தொடருடன்).

திர்மிதியின் அறிவிப்பில் பின்வருமாறு உள்ளது: (நபி (ஸல்) அவர்களிடம்) “அல்லாஹ்வின் தூதரே! இருவர் சந்திக்கும்போது, அவர்களில் யார் முதலில் ஸலாமைத் துவங்குவது?'' என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அவ்விருவரில் அல்லாஹ்விடம் மிகவும் நெருக்கமானவர்” என்று பதிலளித்தார்கள். (திர்மிதி: இது ஹஸன் எனும் தரத்திலுள்ள ஹதீஸாகும்).