அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ஒவ்வொரு நம்பிக்கையாளருக்கும் இரண்டு வாசல்கள் உள்ளன: ஒரு வாசல் வழியாக அவருடைய செயல்கள் மேலேறுகின்றன, மற்றொரு வாசல் வழியாக அவருடைய வாழ்வாதாரம் இறங்குகிறது. ஆகவே, அவர் மரணிக்கும்போது, அவை (அந்த இரு வாசல்களும்) அவருக்காக (அவர் இல்லாததால்) அழுகின்றன. இதுவே வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ்வின் கூற்றின் பொருளாகும்: வானங்களும் பூமியும் அவர்களுக்காக அழவில்லை, மேலும் அவர்களுக்கு அவகாசமும் அளிக்கப்படவில்லை (44:29).”