ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹஜருல் அஸ்வத் கல்லிலிருந்து தொடங்கி, அதனை (மீண்டும்) அடையும் வரையிலான மூன்று சுற்றுக்களை (தவாஃபின் போது ரமல் எனும்) வேகமாக நடந்ததை நான் கண்டேன்.
وَحَدَّثَنِي أَبُو الطَّاهِرِ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ، أَخْبَرَنِي مَالِكٌ، وَابْنُ، جُرَيْجٍ عَنْ جَعْفَرِ بْنِ مُحَمَّدٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم رَمَلَ الثَّلاَثَةَ أَطْوَافٍ مِنَ الْحَجَرِ إِلَى الْحَجَرِ .
ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (கஅபாவைச் சுற்றிய) முதல் மூன்று சுற்றுக்களில் (ஹஜருல் அஸ்வத்) கல்லிலிருந்து (மீண்டும் ஹஜருல் அஸ்வத்) கல் வரை ரம்ல் (வேகமாக நடந்து, தோள்களை அசைத்து) செய்தார்கள்.