இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: தம்மத்துஃ முறையில் உம்ரா செய்து ஹஜ்ஜுக்காகக் காத்திருப்பவர் (ஹத்யி இல்லாத பட்சத்தில் நோற்க வேண்டிய மூன்று) நோன்புகளை அரஃபா நாள் வரை நோற்க வேண்டும். அவருக்கு ஹத்யி (பலிப்பிராணி) கிடைக்காமலும், அவர் (அரஃபா நாளுக்கு முன் அந்த நோன்புகளை) நோற்காமலும் இருந்தால், அவர் மினாவின் நாட்களில் நோன்பு நோற்க வேண்டும்.
ஆயிஷா (ரலி) வழியாகவும் இது போன்றே அறிவிக்கப்பட்டுள்ளது.