மாலிக் அவர்கள் ஹிஷாம் இப்னு உர்வா அவர்களிடமிருந்தும், ஹிஷாம் இப்னு உர்வா அவர்கள் தம் தந்தை (உர்வா) அவர்களிடமிருந்தும், தம் தந்தை (உர்வா) அவர்கள் நபி (ஸல்) அவர்களின் மனைவியான ஆயிஷா (ரழி) அவர்களிடமிருந்தும், ‘நபி (ஸல்) அவர்கள் கிப்லாவின் சுவரில் எச்சிலையோ, அல்லது மூக்குச்சளியையோ அல்லது சளியையோ கண்டு, அதைச் சுரண்டி நீக்கினார்கள்’ என்று அறிவித்த செய்தியை, யஹ்யா அவர்கள் எனக்கு அறிவித்தார்கள்.