حَدَّثَنَا أَبُو الطَّاهِرِ، أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي مَالِكُ بْنُ أَنَسٍ، عَنْ يَزِيدَ بْنِ خُصَيْفَةَ،
عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ، عَنْ عَائِشَةَ، زَوْجِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّ رَسُولَ اللَّهِ صلى
الله عليه وسلم قَالَ لاَ يُصِيبُ الْمُؤْمِنَ مِنْ مُصِيبَةٍ حَتَّى الشَّوْكَةِ إِلاَّ قُصَّ بِهَا مِنْ خَطَايَاهُ
أَوْ كُفِّرَ بِهَا مِنْ خَطَايَاهُ . لاَ يَدْرِي يَزِيدُ أَيَّتُهُمَا قَالَ عُرْوَةُ .
ஆயிஷா (ரழி) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ஓர் இறைநம்பிக்கையாளருக்கு எந்தத் துன்பம் ஏற்பட்டாலும், ஒரு முள் குத்துவது (போன்ற மிகச் சிறிய துன்பம்) ஆனாலும் கூட, அதன் மூலம் அவருடைய பாவங்கள் குறைக்கப்படுகின்றன அல்லது அவருடைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன.” யஸீத் அவர்கள் கூறுகிறார்கள்: “உர்வா அவர்கள் (இவ்விரண்டில்) எதைச் சொன்னார்கள் என்பது தமக்குத் தெரியாது.”