இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

2023ஸஹீஹ் முஸ்லிம்
وَحَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، وَمُحَمَّدُ بْنُ رُمْحٍ، قَالاَ أَخْبَرَنَا اللَّيْثُ، ح وَحَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا لَيْثٌ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ، أَنَّهُ كَانَ إِذَا صَلَّى الْجُمُعَةَ انْصَرَفَ فَسَجَدَ سَجْدَتَيْنِ فِي بَيْتِهِ ثُمَّ قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَصْنَعُ ذَلِكَ ‏.‏
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் ஜும்ஆத் தொழுகையைத் தொழுது முடித்ததும் (பள்ளியிலிருந்து) திரும்பிச் சென்று, தம் வீட்டில் இரண்டு ரக்அத்கள் தொழுவார்கள். பின்னர், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறு செய்வார்கள்" என்று கூறுவார்கள்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح