அதாஉ பின் அஸ்-ஸாயிப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் ஒரு விருந்துக்கு அழைக்கப்பட்டோம். அங்கே ஸயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்களும், இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களின் விடுதலையான அடிமை மிக்ஸம் (ரஹ்) அவர்களும் இருந்தனர். உணவு வைக்கப்பட்டபோது, ஸயீத் (ரஹ்) அவர்கள், "உணவு (உண்ணும் முறை) குறித்துக் கூறப்பட்டவை உங்கள் அனைவருக்கும் எட்டியுள்ளதா?" என்று கேட்டார்கள். அதற்கு மிக்ஸம் (ரஹ்) அவர்கள், "அபூ அப்தில்லாஹ் அவர்களே! (இதுவரை) அதைக் கேள்விப்படாதவர்களுக்காக (அதை) அறிவியுங்கள்" என்று கூறினார்கள்.
அப்போது ஸயீத் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் என்னிடம் கூறினார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "உணவு (பாத்திரத்தில்) வைக்கப்பட்டால், அதன் நடுப்பகுதியிலிருந்து உண்ணாதீர்கள். ஏனெனில், பரக்கத் (அருள்வளம்) அதன் நடுப்பகுதியில்தான் இறங்குகிறது. எனவே, அதன் ஓரங்களிலிருந்தே உண்ணுங்கள்."