ஜரீர் பின் அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் கூறுகிறார்கள்:
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் (அச்சத்தால்) உடல் நடுங்கிக் கொண்டிருந்த ஒரு மனிதர் அழைத்து வரப்பட்டார். அப்போது அவரிடம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், "உமக்கு நீர் எளிதாக்கிக் கொள்வீராக (பயப்பட வேண்டாம்); நிச்சயமாக நான் இந்த (மக்கா) பள்ளத்தாக்கில் உலர்ந்த இறைச்சியைச் சாப்பிட்டு வந்த ஒரு குறைஷிப் பெண்ணின் மகன்தான்" என்று கூறினார்கள்.
பின்னர் ஜரீர் பின் அப்துல்லாஹ் அல்பஜலீ (ரழி) அவர்கள் (பின்வரும் இறைவசனத்தை) ஓதினார்கள்:
பொருள்: "(நபியே!) நீர் அவர்கள் மீது அடக்குமுறையாளராக இல்லை. எனவே, எனது எச்சரிக்கையை அஞ்சுவோருக்கு இந்தக் குர்ஆனைக் கொண்டு அறிவுரை கூறுவீராக!" (குர்ஆன் 50:45).
(இது புகாரி மற்றும் முஸ்லிம் ஆகியோரின் நிபந்தனைகளுக்கு அமைவான ஆதாரப்பூர்வமான - ஸஹீஹ் - ஹதீஸாகும். ஆயினும், அவர்கள் இருவருமே இதனைத் தமது நூல்களில் பதிவு செய்யவில்லை).
ஹதீஸ் தரம் : இமாம் புகாரி மற்றும் இமாம் முஸ்லிம் ஆகிய இருவரின் நிபந்தனைகளுக்கும் உட்பட்டது