حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ حَدَّثَنِي مَالِكُ بْنُ أَنَسٍ، عَنْ نَافِعٍ، عَنْ زَيْدِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي بَكْرٍ الصِّدِّيقِ، عَنْ أُمِّ سَلَمَةَ، زَوْجِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ الَّذِي يَشْرَبُ فِي إِنَاءِ الْفِضَّةِ إِنَّمَا يُجَرْجِرُ فِي بَطْنِهِ نَارَ جَهَنَّمَ .
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் துணைவியார் உம்மு ஸலமா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "வெள்ளிப் பாத்திரத்தில் அருந்துபவர், தமது வயிற்றில் நரக நெருப்பையே உள்ளிறக்குகிறார்."
حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، قَالَ قَرَأْتُ عَلَى مَالِكٍ عَنْ نَافِعٍ، عَنْ زَيْدِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي بَكْرٍ الصِّدِّيقِ، عَنْ أُمِّ سَلَمَةَ، زَوْجِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ الَّذِي يَشْرَبُ فِي آنِيَةِ الْفِضَّةِ إِنَّمَا يُجَرْجِرُ فِي بَطْنِهِ نَارَ جَهَنَّمَ .
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் மனைவியான உம்மு ஸலமா (ரலி) அவர்கள் கூறினார்கள்: வெள்ளிப் பாத்திரத்தில் (பானம்) அருந்துபவர், உண்மையில் நரக நெருப்பைத் தன் வயிற்றில் மடமடவென்று விழுங்குகிறார்.
உம்மு ஸலமா (ரலி) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"எவர் தங்கம் அல்லது வெள்ளிப் பாத்திரத்தில் பருகுகிறாரோ, அவர் தம் வயிற்றில் நரக நெருப்பையே (சத்தத்துடன்) விழுங்குகிறார்."