தல்க் இப்னு அலி (ரழி) அவர்கள் கூறினார்கள்:
'நாங்கள் ஒரு தூதுக்குழுவாகப் புறப்பட்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தோம். நாங்கள் அவர்களிடம் உடன்படிக்கை செய்து, அவர்களுடன் தொழுதோம். அவர்கள் தொழுகையை முடித்தபோது, கிராமவாசியைப் போன்ற தோற்றமளித்த ஒருவர் வந்து, 'அல்லாஹ்வின் தூதரே! தொழுகையின் போது தனது ஆண் உறுப்பைத் தொட்ட ஒருவரைப் பற்றி நீங்கள் என்ன கருதுகிறீர்கள்?' என்று கேட்டார். அதற்கு அவர்கள், 'அது உன்னுடைய ஒரு சதைப்பிண்டம் தானே? அல்லது உன்னில் ஒரு பகுதி தானே?' என்று கூறினார்கள்.