இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

679சுனனுந் நஸாயீ
أَخْبَرَنَا قُتَيْبَةُ، عَنِ اللَّيْثِ، عَنِ الْحُكَيْمِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ عَامِرِ بْنِ سَعْدٍ، عَنْ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ، عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ ‏ مَنْ قَالَ حِينَ يَسْمَعُ الْمُؤَذِّنَ وَأَنَا أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ رَضِيتُ بِاللَّهِ رَبًّا وَبِمُحَمَّدٍ رَسُولاً وَبِالإِسْلاَمِ دِينًا غُفِرَ لَهُ ذَنْبُهُ ‏ ‏ ‏.‏
சஃத் இப்னு அபீ வக்காஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

"யார் முஅத்தின் சொல்வதைக் கேட்கும் போது, 'அஷ்ஹது அன் லா இலாஹ இல்லல்லாஹ் வஹ்தஹு லா ஷரீக்க லஹு, வ அன்ன முஹம்மதன் அப்துஹு வ ரசூலுஹு, ரழித்து பில்லாஹி ரப்பன், வ பில் இஸ்லாமி தீனன், வ பி முஹம்மதின் ரசூலா (வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்றும், அவன் தனித்தவன், அவனுக்கு யாதொரு இணையுமில்லை என்றும், மேலும் முஹம்மது (ஸல்) அவர்கள் அவனுடைய அடியாரும் தூதருமாவார் என்றும் நான் சாட்சி கூறுகிறேன்; அல்லாஹ்வை இரட்சகனாகவும், இஸ்லாத்தை மார்க்கமாகவும், முஹம்மது (ஸல்) அவர்களைத் தூதராகவும் நான் பொருந்திக் கொண்டேன்)' என்று கூறுகிறாரோ, அவரது பாவங்கள் மன்னிக்கப்படும்."

ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (தாருஸ்ஸலாம் பதிப்பு)