அல்-பராஃ பின் ஆஸிப் (ரழி) அவர்கள் அறிவித்ததாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் ருகூவும், ருகூவிலிருந்து தமது தலையை உயர்த்தியதும் (அதாவது, இஃதிதால் எனும் நிற்றல்), அவர்களின் ஸஜ்தாவும், இரு ஸஜ்தாக்களுக்கும் இடைப்பட்ட நேரமும் (அதாவது, ஜல்ஸா எனும் அமர்தல்) ஏறக்குறைய சமமாக இருந்தன.