"உமர் பின் அல்கத்தாப் (ரழி) அவர்களின் காலத்தில் மக்கள் ரமலான் மாதத்தில் (தராவீஹ் மற்றும் வித்ருக்காக) இருபத்து மூன்று ரக்அத்துகள் தொழுது வந்தனர்."
(ரக்அத்துகளின் எண்ணிக்கை குறித்த) இரண்டு அறிவிப்புகளையும் (பின்வருமாறு) ஒருங்கிணைத்துப் புரிந்துகொள்ள முடியும்; ஏனெனில், அவர்கள் (ஆரம்பத்தில்) பதினோரு ரக்அத்துகள் தொழுது வந்தனர். பின்னர் (ஓதப்படும் ஸூராக்களின் நீளத்தைக் குறைத்து, ரக்அத்துகளின் எண்ணிக்கையை அதிகரித்து) இருபது ரக்அத்துகள் தொழுது, மூன்று ரக்அத்துகள் வித்ரு தொழுதனர். அல்லாஹ்வே நன்கறிந்தவன்.