சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்:
"மக்கள் தொழுகையில் (தம்) வலது கையை இடது முன்கையின் மீது வைக்குமாறு கட்டளையிடப்பட்டிருந்தனர்."
அபூ ஹாஸிம் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: "இதை அவர் (சஹ்ல்), நபி (ஸல்) அவர்களுக்கே தொடர்புபடுத்துகிறார் என்பதைத் தவிர வேறெதையும் நான் அறியமாட்டேன்."
இஸ்மாயீல் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: "அது (நபி (ஸல்) அவர்களுக்கே) தொடர்புபடுத்தப்படுகிறது ('யுன்மா'). அவர் 'யன்மீ' (தொடர்புபடுத்துகிறார்) என்று கூறவில்லை."