அஸ்மா பின்த் உமைஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அவர்கள் 'அல்-பைதா' எனும் இடத்தில் முஹம்மத் பின் அபூபக்ர் அஸ்-சித்தீக் (ரலி) அவர்களைப் பெற்றெடுத்தார்கள். இது குறித்து அபூபக்ர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தெரிவித்தார்கள். அதற்கு அவர்கள், "(அவளைக்) குளித்துவிட்டு, (இஹ்ராம் கட்டி) தல்பியா கூறும்படி அவளுக்குக் கட்டளையிடுங்கள்" என்று கூறினார்கள்.