இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

3053ஸஹீஹ் முஸ்லிம்
وَحَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ بْنِ قَعْنَبٍ، حَدَّثَنَا مَالِكٌ، ح وَحَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، - وَاللَّفْظُ لَهُ - قَالَ قَرَأْتُ عَلَى مَالِكٍ عَنْ جَعْفَرِ بْنِ مُحَمَّدٍ عَنْ أَبِيهِ عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ - رضى الله عنهما - أَنَّهُ قَالَ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم رَمَلَ مِنَ الْحَجَرِ الأَسْوَدِ حَتَّى انْتَهَى إِلَيْهِ ثَلاَثَةَ أَطْوَافٍ ‏.‏
ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹஜருல் அஸ்வத் கல்லிலிருந்து தொடங்கி, அதனை (மீண்டும்) அடையும் வரையிலான மூன்று சுற்றுக்களை (தவாஃபின் போது ரமல் எனும்) வேகமாக நடந்ததை நான் கண்டேன்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
3054ஸஹீஹ் முஸ்லிம்
وَحَدَّثَنِي أَبُو الطَّاهِرِ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ، أَخْبَرَنِي مَالِكٌ، وَابْنُ، جُرَيْجٍ عَنْ جَعْفَرِ بْنِ مُحَمَّدٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم رَمَلَ الثَّلاَثَةَ أَطْوَافٍ مِنَ الْحَجَرِ إِلَى الْحَجَرِ ‏.‏
ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (கஅபாவைச் சுற்றிய) முதல் மூன்று சுற்றுக்களில் (ஹஜருல் அஸ்வத்) கல்லிலிருந்து (மீண்டும் ஹஜருல் அஸ்வத்) கல் வரை ரம்ல் (வேகமாக நடந்து, தோள்களை அசைத்து) செய்தார்கள்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
2944சுனனுந் நஸாயீ
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ سَلَمَةَ، وَالْحَارِثُ بْنُ مِسْكِينٍ، قِرَاءَةً عَلَيْهِ وَأَنَا أَسْمَعُ، عَنِ ابْنِ الْقَاسِمِ، قَالَ حَدَّثَنِي مَالِكٌ، عَنْ جَعْفَرِ بْنِ مُحَمَّدٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم رَمَلَ مِنَ الْحَجَرِ إِلَى الْحَجَرِ حَتَّى انْتَهَى إِلَيْهِ ثَلاَثَةَ أَطْوَافٍ ‏.‏
ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் கூறினார்கள்: 'அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மூன்று சுற்றுக்களை முடிக்கும் வரை, ஹஜருல் அஸ்வத் கல்லிலிருந்து ஹஜருல் அஸ்வத் கல் வரை ரமல் (தோள்களை அசைத்து, கால்களை விரைவாக எடுத்து வைக்கும் ஒருவகை நடை) செய்ததை நான் பார்த்தேன்.'
ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (தாருஸ்ஸலாம் பதிப்பு)
15169முஸ்னது அஹ்மத்
حَدَّثَنَا إِسْحَاقُ أَخْبَرَنِي مَالِكٌ عَنْ جَعْفَرٍ عَنْ أَبِيهِ عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللهِ قَالَ رَأَيْتُ رَسُولَ اللهِ ﷺ رَمَلَ مِنَ الْحَجَرِ الْأَسْوَدِ حَتَّى انْتَهَى إِلَيْهِ ثَلَاثَةَ أَطْوَافٍ
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரழி) அவர்கள் கூறுகிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹஜருல் அஸ்வதிலிருந்து (தொடங்கி) மீண்டும் அதற்கே வந்தடையும் வரை, (தவாஃபின் முதல்) மூன்று சுற்றுகளில் (தோள்களை அசைத்து) விரைந்து (ரமல்) நடந்ததை நான் பார்த்தேன்.
ஹதீஸ் தரம் : இஸ்னாதுஹு ஸஹீஹ் (இதன் அறிவிப்பாளர் தொடர் ஆதாரபூர்வமானது)
إسناده صحيح
أَخْبَرَنَا أَبُو أَحْمَدَ عَبْدُ اللهِ بْنُ مُحَمَّدِ بْنِ الْحَسَنِ الْمِهْرَجَانِيُّ , ثنا أَبُو الْعَبَّاسِ مُحَمَّدُ بْنُ يَعْقُوبَ الْأَصَمُّ إِمْلَاءً , ثنا الْحَسَنُ بْنُ عَلِيِّ بْنِ عَفَّانَ الْعَامِرِيُّ , ثنا زَيْدُ بْنُ الْحُبَابِ , ثنا مَالِكُ بْنُ أَنَسٍ , ح وَأَخْبَرَنَا أَبُو عَبْدِ اللهِ الْحَافِظُ , أَخْبَرَنِي أَبُو النَّضْرِ الْفَقِيهُ , ثنا عُثْمَانُ بْنُ سَعِيدٍ الدَّارِمِيُّ , وَعَلِيُّ بْنُ عَبْدِ الْعَزِيزِ الْبَغَوِيُّ , قَالَا: ثنا الْقَعْنَبِيُّ , فِيمَا قَرَأَ عَلَى مَالِكٍ ح وَأَخْبَرَنَا أَبُو عَبْدِ اللهِ , ثنا يَحْيَى بْنُ مَنْصُورٍ الْقَاضِي , ثنا مُحَمَّدُ بْنُ عَبْدِ السَّلَامِ , ثنا يَحْيَى بْنُ يَحْيَى , قَالَ: قَرَأْتُ عَلَى مَالِكِ بْنِ أَنَسٍ , أَخْبَرَنِي جَعْفَرُ بْنُ مُحَمَّدٍ , عَنْ أَبِيهِ , عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللهِ أَنَّهُ قَالَ: " رَأَيْتُ رَسُولَ اللهِ ﷺ رَمَلَ مِنَ الْحَجَرِ الْأَسْوَدِ حَتَّى انْتَهَى إِلَيْهِ ثَلَاثَةَ أَطْوَافٍ " رَوَاهُ مُسْلِمٌ فِي الصَّحِيحِ , عَنِ الْقَعْنَبِيِّ وَيَحْيَى بْنِ يَحْيَى وَفِي رِوَايَةِ زَيْدِ بْنِ الْحُبَابِ , قَالَ: " رَمَلَ مِنَ الْحَجَرِ إِلَى الْحَجَرِ ثَلَاثًا وَمَشَى أَرْبَعًا "
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரழி) அவர்கள் கூறுகிறார்கள்:

"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹஜருல் அஸ்வதிலிருந்து (தொடங்கி) மீண்டும் அதை வந்தடையும் வரை மூன்று சுற்றுகள் 'ரமல்' (தோள்களை அசைத்து விரைவாக நடப்பதை) நான் பார்த்தேன்."

(இந்த ஹதீஸை இமாம் முஸ்லிம் (ரஹ்) அவர்கள் தமது 'ஸஹீஹ்' நூலில் கஅனபீ மற்றும் யஹ்யா பின் யஹ்யா ஆகியோரின் வழியாகப் பதிவு செய்துள்ளார்கள்).

ஸைத் பின் அல்-ஹுபாப் அவர்களின் மற்றோர் அறிவிப்பில், "(அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்) ஹஜருல் அஸ்வதிலிருந்து (தொடங்கி மீண்டும்) ஹஜருல் அஸ்வத் வரை மூன்று (சுற்றுகள்) விரைந்து நடந்தார்கள், நான்கு (சுற்றுகள் சாதாரணமாக) நடந்தார்கள்" என்று இடம்பெற்றுள்ளது.
ஹதீஸ் தரம் : ஹதீஸ் தரம் கிடைக்கவில்லை
لا نعرف حكم له