இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

1666ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، أَنَّهُ قَالَ سُئِلَ أُسَامَةُ وَأَنَا جَالِسٌ، كَيْفَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَسِيرُ فِي حَجَّةِ الْوَدَاعِ حِينَ دَفَعَ قَالَ كَانَ يَسِيرُ الْعَنَقَ، فَإِذَا وَجَدَ فَجْوَةً نَصَّ‏.‏ قَالَ هِشَامٌ وَالنَّصُّ فَوْقَ الْعَنَقِ‏.‏ قَالَ أَبُو عَبْدِ اللَّهِ فَجْوَةٌ مُتَّسَعٌ، وَالْجَمِيعُ فَجَوَاتٌ وَفِجَاءٌ، وَكَذَلِكَ رَكْوَةٌ وَرِكَاءٌ‏.‏ مَنَاصٌ لَيْسَ حِينَ فِرَارٍ‏.‏
உர்வா பின் ஸுபைர் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நான் அமர்ந்திருந்தபோது உஸாமா (ரலி) அவர்களிடம், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறுதி ஹஜ்ஜின்போது (அரஃபாவிலிருந்து) திரும்பிய வேளையில் எவ்வாறு பயணித்தார்கள்?" என்று கேட்கப்பட்டது.
அதற்கு உஸாமா (ரலி) அவர்கள், "(கூட்ட நெரிசலின் காரணமாக) மிதமான வேகத்தில் ('அனக்' எனும் நடையில்) பயணித்தார்கள். விசாலமான இடத்தைக் கண்டால் (தமது ஒட்டகத்தை) விரட்டிச் செல்வார்கள் ('நஸ்' எனும் வேகத்தில் செல்வார்கள்)" என்று பதிலளித்தார்கள்.
(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) ஹிஷாம் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: 'நஸ்' என்பது 'அனக்'கை விட வேகமான நடையாகும்.
அபூஅப்துல்லாஹ் (இமாம் புகாரி (ரஹ்) அவர்கள்) கூறுகிறார்கள்: 'ஃபஜ்வா' (فَجْوَةٌ) என்றால் 'விசாலமான இடம்' என்று பொருள். இதன் பன்மை 'ஃபஜவாத்' (فَجَوَاتٌ) மற்றும் 'ஃபிஜாஉ' (فِجَاءٌ) என்பதாகும். 'ரக்வா' (رَكْوَةٌ) என்பதன் பன்மை 'ரிகாஉ' (رِكَاءٌ) என்பதைப் போன்றதாகும். (குர்ஆனின் 38:3 ஆவது வசனத்தில் இடம்பெற்றுள்ள) 'மனாஸ்' (مَنَاصٌ) என்பதற்கு 'தப்பித்துச் செல்லும் நேரமல்ல' என்று பொருள்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
2999ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا يَحْيَى، عَنْ هِشَامٍ، قَالَ أَخْبَرَنِي أَبِي قَالَ، سُئِلَ أُسَامَةُ بْنُ زَيْدٍ ـ رضى الله عنهما ـ كَانَ يَحْيَى يَقُولُ وَأَنَا أَسْمَعُ فَسَقَطَ عَنِّي ـ عَنْ مَسِيرِ النَّبِيِّ صلى الله عليه وسلم فِي حَجَّةِ الْوَدَاعِ، قَالَ فَكَانَ يَسِيرُ الْعَنَقَ، فَإِذَا وَجَدَ فَجْوَةً نَصَّ‏.‏ وَالنَّصُّ فَوْقَ الْعَنَقِ‏.‏
உஸாமா பின் ஸைத் (ரலி) அவர்களிடம், ஹஜ்ஜத்துல் வதா`வின் போது நபி (ஸல்) அவர்களின் பயண வேகம் குறித்துக் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், "நபி (ஸல்) அவர்கள் 'அல்-அனக்' (மிதமான வேகம் - ஒட்டகத்தின் மெதுவான நடை) எனும் நடையில் செல்வார்கள். ஆனால் அவர்கள் ஒரு திறந்த வழியைக் கண்டால் 'அந்-நஸ்' (விரைவு வேகம் - ஒட்டகத்தின் வேகமான நடை) எனும் நடையில் செல்வார்கள்" என்று கூறினார்கள். 'அந்-நஸ்' என்பது 'அல்-அனக்'கை விட வேகமானதாகும்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح