இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

أَخْبَرَنَا أَبُو أَحْمَدَ الْمِهْرَجَانِيُّ أنبأ أَبُو بَكْرِ بْنُ جَعْفَرٍ الْمُزَكِّي ثنا مُحَمَّدُ بْنُ إِبْرَاهِيمَ ثنا ابْنُ بُكَيْرٍ ثنا مَالِكٌ عَنْ نَافِعٍ أَنَّ عَبْدَ الرَّحْمَنِ بْنَ أَبِي هُرَيْرَةَ سَأَلَ عَبْدَ اللهِ بْنَ عُمَرَ ؓ عَمَّا لَفَظَ الْبَحْرُ فَنَهَاهُ عَنْ أَكْلِهِ قَالَ نَافِعٌ ثُمَّ انْقَلَبَ عَبْدُ اللهِ بْنُ عُمَرَ فَدَعَا بِالْمُصْحَفِ فَقَرَأَ {أُحِلَّ لَكُمْ صَيْدُ الْبَحْرِ وَطَعَامُهُ} [المائدة 96] قَالَ نَافِعٌ فَأَرْسَلَنِي عَبْدُ اللهِ بْنُ عُمَرَ إِلَى عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي هُرَيْرَةَ إِنَّهُ لَا بَأْسَ بِهِ فَكُلْهُ
நாஃபிஉ (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

அப்துர்ரஹ்மான் பின் அபூஹுரைரா அவர்கள், கடல் (கரைக்கு) ஒதுக்கியதை (இறந்து கரை ஒதுங்கிய கடல்வாழ் உயிரினங்களை) குறித்து அப்துல்லாஹ் பின் உமர் (ரழி) அவர்களிடம் கேட்டார்கள். (ஆரம்பத்தில்) அதை உண்பதை விட்டும் அவரை அப்துல்லாஹ் பின் உமர் (ரழி) அவர்கள் தடுத்தார்கள்.

நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: பின்னர், அப்துல்லாஹ் பின் உமர் (ரழி) அவர்கள் (தமது வீட்டிற்குத்) திரும்பிச் சென்று, திருக்குர்ஆன் பிரதியை (முஸ்ஹஃபை) கொண்டு வரச் செய்து, "உங்களுக்குக் கடலில் வேட்டையாடுவதும், அதிலுள்ள உணவும் ஆகுமாக்கப்பட்டுள்ளன" (அல்குர்ஆன் 5:96) என்ற வசனத்தை ஓதினார்கள்.

நாஃபிஉ (ரஹ்) அவர்கள் (மேலும்) கூறுகிறார்கள்: பிறகு அப்துல்லாஹ் பின் உமர் (ரழி) அவர்கள் என்னை அப்துர்ரஹ்மான் பின் அபூஹுரைராவிடம் அனுப்பி, "நிச்சயமாக அதில் எவ்விதக் குற்றமுமில்லை, எனவே அதை நீர் உண்ணலாம்" (என்று கூறச் சொன்னார்கள்).
ஹதீஸ் தரம் : ஹதீஸ் தரம் கிடைக்கவில்லை
لا نعرف حكم له