ஆயிஷா (ரழி) அவர்களுக்கு, தம் வீட்டில் வசித்த ஒரு குடும்பத்தாரிடம் 'நர்த்' (backgammon) விளையாட்டு இருப்பதான செய்தி எட்டியது. உடனே அவர்களுக்கு, "நீங்கள் அதை வெளியேற்றாவிட்டால், நிச்சயமாக நான் உங்களை என் வீட்டிலிருந்து வெளியேற்றிவிடுவேன்" என்று சொல்லி அனுப்பினார்கள். மேலும், அவர்களது இச்செயலை அவர் கடுமையாக ஆட்சேபித்தார்கள்.
ஹதீஸ் தரம் : ஹஸனான அறிவிப்பாளர் தொடரைக் கொண்ட மவ்கூஃப் (அல்பானி)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரழி) அவர்கள், தமக்குச் சொந்தமான ஒரு வீட்டில் குடியிருந்தவர்களிடம் பகடைக்காய்கள் (சூதாடும் தாயக்கட்டைகள்) இருப்பதைக் கேள்விப்பட்டார்கள். உடனே அவர்களுக்கு, "நீங்கள் அதை (அங்கிருந்து) வெளியேற்றாவிட்டால், நான் உங்களை எனது வீட்டிலிருந்தே வெளியேற்றிவிடுவேன்" என்று செய்தி அனுப்பினார்கள். மேலும், அவர்களின் அச்செயலை ஆயிஷா (ரழி) அவர்கள் (வன்மையாகக்) கண்டித்தார்கள்.