நுஃமான் பின் பஷீர் (ரழி) அவர்கள் அறிவித்ததாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரண்டு பெருநாட்களிலும் ஜும்ஆவிலும், “ஸப்பிஹிஸ்ம ரப்பிகல் அஃலா” மற்றும் “ஹல் அதாக ஹதீஸுல் காஷியா” ஆகியவற்றை ஓதுபவர்களாக இருந்தார்கள். சில நேரங்களில் அவ்விரண்டும் (பெருநாள் தொழுகையும் ஜும்ஆ தொழுகையும்) ஒரே நாளில் அமைந்துவிடும்; அப்போதும் அவர்கள் அவ்விரண்டையும் ஓதுவார்கள்.