பஹ்ஸ் பின் ஹகீம் அவர்கள் தனது தந்தை வழியாக தனது பாட்டனார் (ரழி) அவர்கள் கூறியதாவது:
"நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் ஏதேனும் (உணவுப் பொருள்) கொண்டுவரப்பட்டால், அது அன்பளிப்பா அல்லது தர்மமா என்று கேட்பார்கள். அது தர்மம் என்று கூறப்பட்டால், அவர்கள் உண்ண மாட்டார்கள். அது அன்பளிப்பு என்று கூறப்பட்டால், தமது கரத்தை நீட்டி (அதை ஏற்றுக்கொண்டு உண்பார்கள்)."