حَدَّثَنَا نَصْرُ بْنُ عَلِيٍّ الْجَهْضَمِيُّ، حَدَّثَنَا بِشْرٌ، - يَعْنِي ابْنَ مُفَضَّلٍ - عَنْ أَبِي مَسْلَمَةَ، عَنْ أَبِي نَضْرَةَ، عَنْ أَبِي سَعِيدٍ، - رضى الله عنه - قَالَ كُنَّا نُسَافِرُ مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فِي رَمَضَانَ فَمَا يُعَابُ عَلَى الصَّائِمِ صَوْمُهُ وَلاَ عَلَى الْمُفْطِرِ إِفْطَارُهُ .
அபூ ஸயீத் அல்-குத்ரீ (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நாங்கள் ரமழான் மாதத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஒரு போர் பயணத்திற்காகப் புறப்பட்டோம். (அப்போது) நோன்பு நோற்றவர் தம் நோன்புக்காகக் குறை கூறப்படவுமில்லை; நோன்பை விட்டவரும் தம் நோன்பை விட்டதற்காகக் குறை கூறப்படவுமில்லை.