حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ مَا حَقُّ امْرِئٍ مُسْلِمٍ لَهُ شَىْءٌ، يُوصِي فِيهِ يَبِيتُ لَيْلَتَيْنِ، إِلاَّ وَوَصِيَّتُهُ مَكْتُوبَةٌ عِنْدَهُ . تَابَعَهُ مُحَمَّدُ بْنُ مُسْلِمٍ عَنْ عَمْرٍو عَنِ ابْنِ عُمَرَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم.
அப்துல்லாஹ் பின் உமர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், "வஸிய்யத் செய்ய வேண்டிய விஷயம் ஏதேனும் உடைய எந்தவொரு முஸ்லிமும், தமது வஸிய்யத்தை எழுதித் தம்மிடம் தயாராக வைத்திருக்காமல் இரண்டு இரவுகள் தங்குவது ஆகுமானதல்ல."
இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மரணசாசனம் மூலம் கொடுக்கப்பட வேண்டிய ஏதேனும் ஒரு பொருளை உடைய முஸ்லிம், அது குறித்து தனது மரணசாசனத்தை எழுதி வைக்காமல் இரண்டு இரவுகள் கழிப்பது கூடாது.
حَدَّثَنَا هَارُونُ بْنُ مَعْرُوفٍ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ، أَخْبَرَنِي عَمْرٌو، - وَهْوَ ابْنُ الْحَارِثِ - عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَالِمٍ، عَنْ أَبِيهِ، أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ مَا حَقُّ امْرِئٍ مُسْلِمٍ لَهُ شَىْءٌ يُوصِي فِيهِ يَبِيتُ ثَلاَثَ لَيَالٍ إِلاَّ وَوَصِيَّتُهُ عِنْدَهُ مَكْتُوبَةٌ . قَالَ عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ مَا مَرَّتْ عَلَىَّ لَيْلَةٌ مُنْذُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ذَلِكَ إِلاَّ وَعِنْدِي وَصِيَّتِي .
சலீம் அவர்கள், தம் தந்தை (அப்துல்லாஹ் பின் உமர் (ரழி)) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறக் கேட்டதாக அறிவித்தார்கள்:
மரண சாசனம் செய்ய ஏதேனும் பொருள் உடைய ஒரு முஸ்லிம், அது சம்பந்தமாக தனது மரண சாசனத்தைத் தம்முடன் எழுதி வைத்திருக்காமல் மூன்று இரவுகள்கூட கழிப்பது முறையல்ல.
அப்துல்லாஹ் பின் உமர் (ரழி) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இதைக் கூறியதை நான் செவியுற்ற நாளிலிருந்து, எனது மரண சாசனம் என்னுடன் (எழுதப்பட்டு) இல்லாமல் நான் ஒரு இரவைக் கூடக் கழிக்கவில்லை.
இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“வஸிய்யத் செய்யப்பட வேண்டிய பொருள் ஏதேனும் ஒரு முஸ்லிமிடம் இருக்குமானால், எழுதப்பட்ட வஸிய்யத் ஒன்றை தம்மிடம் வைத்திருக்காமல் இரண்டு இரவுகளைக் கழிப்பதற்கு அவருக்கு உரிமை இல்லை.”