ஃபைரூஸ் அத்-தைலமி (ரலி) அவர்கள் கூறியதாவது: 'நான் கூறினேன்: 'அல்லாஹ்வின் தூதரே! நான் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டேன்; அப்போது எனக்கு (மனைவிகளாக) இரு சகோதரிகள் இருந்தார்கள்.' அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், 'அவ்விருவரில் நீர் விரும்பும் ஒருவரைத் தேர்ந்தெடுத்துக் கொள்வீராக! (மற்றொருவரை விவாகரத்துச் செய்துவிடுவீராக)' என்று கூறினார்கள்.