حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي بَكْرٍ، عَنْ عَمْرَةَ ابْنَةِ عَبْدِ الرَّحْمَنِ، أَنَّ عَائِشَةَ، زَوْجَ النَّبِيِّ صلى الله عليه وسلم أَخْبَرَتْهَا أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ عِنْدَهَا، وَأَنَّهَا سَمِعَتْ صَوْتَ إِنْسَانٍ يَسْتَأْذِنُ فِي بَيْتِ حَفْصَةَ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ، هَذَا رَجُلٌ يَسْتَأْذِنُ فِي بَيْتِكَ. فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أُرَاهُ فُلاَنًا، لِعَمِّ حَفْصَةَ مِنَ الرَّضَاعَةِ، الرَّضَاعَةُ تُحَرِّمُ مَا تُحَرِّمُ الْوِلاَدَةُ .
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனைவி ஆயிஷா (ரழி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னுடன் இருந்தபோது, ஹஃப்ஸா (ரழி) அவர்களின் வீட்டில் ஒரு மனிதர் (நுழைய) அனுமதி கேட்கும் குரலை நான் கேட்டேன். உடனே நான், "அல்லாஹ்வின் தூதரே! இந்த மனிதர் உங்கள் வீட்டில் நுழைய அனுமதி கேட்கிறார்" என்று கூறினேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவர், (ஹஃப்ஸாவின்) பால்குடிச் சித்தப்பா (தந்தை வழி மாமா) என்றே நான் கருதுகிறேன். பிறப்பினால் தடுக்கப்பட்ட உறவுகள் (அனைத்தும்) பால்குடியினாலும் தடுக்கப்படுகின்றன" என்று கூறினார்கள்.