சாலிம் இப்னு அப்துல்லாஹ் அவர்கள், தம் தந்தையார் அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் வாயிலாக, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறியதாக அறிவித்தார்கள்:
மந்தையைக் காக்கவோ அல்லது வேட்டையாடவோ அல்லாமல் (வேறு காரணத்திற்காக) நாய் வைத்திருப்பவர் ஒவ்வொரு நாளும் தம்முடைய நற்செயல்களிலிருந்து இரண்டு கீராத்துக்களை இழப்பார்.
அப்துல்லாஹ் (ரழி) அவர்களும் அபூ ஹுரைரா (ரழி) அவர்களும் மேலும் கூறினார்கள்: 'அல்லது வயலைக் காக்கும் நாய்'.