அலி இப்னு அபூ தாலிப் (ரழி) அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) எனக்குத் தங்க மோதிரம் அணிவதையும், ‘கஸ்ஸீ’ (எனும் வரிப் பட்டு) ஆடை அணிவதையும், ருகூஃ மற்றும் சஜ்தாவில் (குர்ஆன்) ஓதுவதையும், குங்குமப்பூச் சாயம் தோய்க்கப்பட்ட ஆடை அணிவதையும் தடை விதித்தார்கள்.