அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! பணியாளரை நாங்கள் எத்தனை முறை மன்னிக்க வேண்டும்?" என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் மௌனமாக இருந்தார்கள். பிறகு அவர் மீண்டும் (தன்) பேச்சைத் திரும்பச் சொன்னார். அப்போதும் அவர்கள் மௌனமாகவே இருந்தார்கள். மூன்றாவது முறையாக (கேட்டபோது), "அவரைத் தினமும் எழுபது முறை மன்னியுங்கள்" என்று கூறினார்கள்.