அபுத்தர்தா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள், நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், "எவருக்கு இரக்கத்தின் பங்கு வழங்கப்பட்டுள்ளதோ, அவருக்கு நன்மையின் பங்கு வழங்கப்பட்டுவிட்டது. எவருக்கு இரக்கத்தின் பங்கு மறுக்கப்படுகிறதோ, அவருக்கு நன்மையின் பங்கு மறுக்கப்பட்டுவிட்டது. கியாமத் நாளில் ஓர் இறைநம்பிக்கையாளரின் தராசில் நற்குணமே மிகவும் கனமானதாக இருக்கும். முரட்டுத்தனமானவரும், தீய வார்த்தைகளைப் பேசுபவருமான ஒருவரை அல்லாஹ் வெறுக்கிறான்."